எஞ்சியுள்ள எழுத்துக்களை எழுப்பி ஏட்டில் என்னுரை எழுத எண்ணினாலும் என்னில் எங்கும் நிறைந்த உன் எண்ணங்களை எளிதில் எதிரொலிக்க செய்கிறதடி என் என்னுயிரே !
பழுதுபட்ட என் வாழ்வை விதானமாக விரித்து உன் பனிப்பருவ பஞ்சவர்ணப் பாதத்தை பரிபாடலாய் அதனுள் பதிய செய்து பண்புச் சொல்லின் பதிப்பகமாக அப்பரம்பொருளாய் படிக்கவும் !
என் உயிரை உருக்குலைந்த எனதுள்ளத்தின் உரை விளக்கமான உன் குரலையும் அத்துடன் ஒன்றிணைந்த பாடலை நகலெடுத்து என் நினைவெல்லாம் நிறைக்கவும் !
அப்பாடலின் சுருதி சேரா சந்திப் பிழையின் அழகில் அகப்பட்டு அவை யாவையும் உன்னிடம் மறைக்கவும் !
தவிக்கிறேன் எனதுயிரே !
கல்லூரியில் கலப்பில்லாமல் கண்டுணர்ந்ததை நீயோ உன் நக்சல் நாவால் நகைச்சுவையாய் நாள்தோறும் என்னிடம் கூறினாய் !
இதுவரை இயல்பாக இயங்கிய என் இதயத்தின் இயங்குநிலை இயக்கமாக நீயொருத்தியே மாறினாய் !
செருக்குடைய என் காதலையோ உன் செவிகள் கேட்க அழைக்கிறேன் !
என் கற்பவிருட்சக காதலை உன் உள்ளம் உணர நுழைக்கறேன் !
காதல் எனும் காதலியே !
நன்றி - Suseedharan K S
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments