தமிழ் கவிதை அன்பே Tamil Kavithai Anpe - உமாமஹேஷ்வரி

Anpe

அன்பே,அலைகளின் தொடுகைக்காகத்தான் 

கரைகள் காத்திருக்கின்றன

அடிவானின் தொடுகைக்காகத்தான்

கடல்கள் காத்திருக்கின்றன

நதியின் தொடுகைக்காகத்தான்

நாணல் காத்திருக்கின்றது

நிலவின் தொடுகைக்காகத்தான்

நீல வானம் காத்திருக்கின்றது

வண்டின் தொடுகைக்காகத்தான்

மலர்கள் காத்திருக்கின்றன

தென்றலின் தொடுகைக்காகத்தான்

நந்தவனங்கள் காத்திருக்கின்றன

இதழ்களின் தொடுகையாற்றான்

வார்த்தைகள் பிறக்கின்றன

இதயங்களின் தொடுகையாற்றான்

காதல் பிறக்கின்றது அன்பே,


தொடுகையின்றேல் இவ்வுலகு எங்கே,நீ எங்கே,நான் எங்கே

எம்முறவுதான் எங்கே 

அன்பே,தொட்டுச் சென்ற  

உன்விரல்கள்  அறிந்திருக்கவில்லையா? 

தொடுவதற்காகவே ஏங்கும்

இதயம் இங்கும் உண்டென்று  

நன்றி - உமாமஹேஷ்வரி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments