மாடமாளிகைகளும்
கூட கோபுரங்களூம்
படை வீடுகளும்
கடை வீதிகளும்
கொண்ட தமிழகமே..
நான் தெருவோரம் நிலத்தில்
இலையில்லா மரநிழலில் கூரை நெய்து
வளிகோளத்தை சுற்றுசுவர் ஆக்கி
நடைபாதையில் கிடைபிணமாய்
உறங்குகின்றேன்...
பகல் வெயிலிலும்
வண்டி புகையிலும்
இரவு பனியிலும்
கொசுவின் பிடியிலும்
என் மேனி எனும் கழனியில்
கொப்பளங்கள் விளைகின்றன...
எனக்கு கண்ணும் காணாது
என்னைக் கடந்து போவாரும் தெரியாது
காதும் கேட்காது என்னைக் கடிந்தோர்
சொல்லும் கூசாது
வாயும் பேசாது அது
புசிக்கும் பசியை கூறாது
காலும் நடக்காது
எதிர்காலமும் எனக்கேது....
மழை பெய்தாலும் கழிவு நீரில்தான்
தாகம் தணிக்கின்றேள்
காலம் கனிந்தால் என்ன
கழனி விளைந்து தரணி செழித்தால் என்ன....
யாசகம் செய்யும் எனக்கு
அட்சயபாத்திரம் எதுக்கு...
ஆக்கம் கரு மாரியப்பன் ஊர்கவலன் கடையநல்லூர் தென்காசி.
நன்றி - Mariappan U
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments