ஆயிரம் குறுஞ்செய்திகள் கைப்பேசியில்
அனுப்பி இருந்தாலும் இதுவே
வெள்ளைக்கடதாசியில் நான் எழுதும் முதல் கடிதம்.
கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை
நம் உறவை போல. அன்று கைப்பேசி உறவு என்று தவிர்த்தேன்.
இன்று கைத்தவறி விடுவாயோ என்று தவிக்கிறேன்.
மாதக்கணக்காய் பேசியதில்லை
இருந்தும் மனம்விட்டு பேசியுள்ளேன்
உன்னிடம் மாத்திரமே . என் கசப்பான பக்கங்கள்
அனைத்தும் இணிப்பாய் இனிக்கிறது உன்னால் இன்று.
தொலைந்து போக ஆசைப்பட்டேன்
தொலைதூரம் வந்துபோ என்கிறாய்
என் கைகளை இறுக பிடித்து கொண்டு.
தாய்மை உணர்கிறேன் இருந்தும் நீ என் தாயுமல்ல.
அன்பால் கட்டுபோடுகிறாய். இருந்தும் நீ என் தந்தையல்ல
பாதுகாக்க படுகிறேன் நீ என் சகோதரனும் அல்ல
துன்பங்கள் பகிர படுகிறது நீ என் தோழன் அல்ல.
பல சண்டைகள் புரிகிறாய் என் எதிரியுமல்ல
வார்த்தைகள் முடிந்தும் மணிக்கணக்காக
பேசுகிறோம் இருந்தும் நீ என் காதலனும் அல்ல.
இது காதல் இல்லை இது காமம் இல்லை
இவ் உறவிற்கு உலகத்தில் பெயரில்லை
என்றாலும் நேசம் கடந்து நேசிக்கிறாய்
வானமாய் மாறி. பகலை தடைசெய்ய
சொல்லி கோரிக்கை விடுத்தேன்
இறைவனிடம் காரணம் கேட்டார்
நிலவொளியால் மாத்திரமே வானம்
அழகாக தெரிய வேண்டும் என்றேன்
நன்றி - Rajasekar Hilani
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments