வரையப் படாத ஓவியங்கள்
களைந்து செல்லும் மேகங்கள்
வண்ணம் தீட்டப் படாத காற்று
எண்ணத்தில் எழுதபடாத ஓசைகள்
என்றும் இனிக்கும் தேடல்கள்
எங்கும் பறக்கும் பறவைகள்
காற்றில் சிரிக்கும் மரங்கள்
கவிதை படிக்கும் தென்றல்
கரம் கோர்க்கும் பூங்காற்று
அணைக்கின்ற சாரல்
அடிக்கின்ற புயல்
பனித்துளியை சுண்டி இழுக்கும் சூரியன்
விண்ணைத் தொடும் நீராவி
என்னைத் தொடும் மழைத்துளி
சுற்றும் பூமி சுழலும் கோள்கள்
என்னோடு சேர்ந்து சிரிக்கும்
மூச்சி காற்று எல்லாம்
இயற்கை என்ற பெயரில்
இறைவன் செதுக்கிய கவிதைகள்........
நன்றி - கொ.லோகேஸ்வரி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments