கந்தல் ஆடைக் குள்ளும்
காதல் உண்டு
ஒட்டுக் குடிசைக் குள்ளும்
காமம் உண்டு
அன்பு செலுத்தும் முன்னே
ஈர்க்கும் பால்
பழகி நெருங்கும் முன்னே
இளகும் உறவு
காலணி அணியா பாதங்கள்
சாலையைத் தேய்க்கும்
அழுக்கு நிறைந்த தேகமும்
மணம் வீசும்
சிலை ஓரம் ஒதுங்கிய
விழிகள் பேச
இரவுக்கு ஏங்கிய மனமோ
மெல்ல சிலிர்க்கும்
ஒதுங்கும் இடம் தேடியே
உள்ளம் தவிக்க
உறக்கம் மறந்து இருண்ட
இடம் தனிக்கும்.
நன்றி - நாக. சிவக்குமார்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments