மண்ணாலே வீடெடுத்து
மரவள்ளி கிழங்கெடுத்து
தினைமாவு தேனெடுத்து
திமிர்கொண்ட நதியோரம்
தேன்நிலவு அடியநாட்கள்
திகட்ட திகட்ட வருகிறதே ஞாபகங்களாய்
மகவிரண்டு பெற்றெடுத்து
மனம்போல தான்வளர்த்து
மகத்தான அறிவுத்தந்து
மணமும் முடித்துவிட்டோம்.
கைத்தலம் பிடித்தவளின்
கரம்பிடித்தே காடுசெல்ல
கண்டிருந்த கனவுயெல்லாம்
கற்றோடே போனதம்மா
மகராசி முந்திச்செல்ல
மருமகளின் கையாலே
மதிய உணவுக்காய்
மணிக் கணக்கா
மண்டியிட்டு காத்திருக்க
மனதோடு எரிகிறது
மனையாளின் ஞாபகங்கள்
நன்றி - நா. தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments