தமிழ் கவிதை காதல். Tamil Kavithai Kadhal - இளவரசி

இரு மனங்களின் சங்கமம்

தேர்வு முடிவு அறிவிக்கும் தினம்

காதல் சொல்லி தரும் கல்வி அல்ல!

மனங்கள் சொல்லும் அன்பின் வெளிப்பாடு காதல் !


மனதால் ஒத்த உள்ளங்களை கொண்ட மனிதர்களை,

மதத்தை சொல்லி பிரிக்காதீர்கள்.

மழை இடம் பார்த்து பெய்வதில்லை,

சூரியனும் இடம் பார்த்து உதிப்பது இல்லை ,


இறைவன் தந்த அற்புதம் காதல் 

உருவம் பார்த்து காதல் செய்யாதே !

உள்ளம் பார்த்து காதல் செய் !

உணர்வுகளுக்கு முக்கியத்தும் தந்தால் 


காதல் நீடிக்கும் காவியமாக,

சுயநலத்தை குறை!

நான், நீ என்று   யோசிப்பதை

விட நாம் என்று யோசி கனவு காண்

கனவில் கூட பிரியாத காதலர்கள் 

இருக்க யோசி !அதிகமாய் நேசி ! விட்டு கொடு!


காதலுக்குக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடு!

காதலை மட்டும் விட்டு கொடுக்காதே!

உண்மையான காதல் நல்ல குடும்பத்தை உருவாக்கும் !

நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்தை ஏற்படுத்தும்   

நல்ல சமுதாயம் நல்ல நாட்டை உருவாக்கும்.


காதல் சுறுச்சுறுப்பாக மாற்றும் மாய சக்தி உள்ள ஆயுதம்! 

வீரனாக மாற்றும் ! காதல் சிரிக்க வைக்கும்

காதல் சிந்திக்க வைக்கும் 

காதல் ! நல்ல உண்மையான காதலை போற்றுவோம் ! 

காதலர்களை வாழ வைப்போம்!

நன்றி உ. இளவரசி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments