2024 இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024 Sri Lankan Presidential Election Results

Sri Lankan Presidential Election Results

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 9வது ஜனாதிபதித் தேர்தலாகும், இது 21 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் அனைத்து மாவட்ட வாக்கெடுப்பு நிலையங்களிலும். தமிழர் பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுள்ளது.

களத்தில் 38 வேட்பாளர்கள் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.

இதில் வெல்லப் போவது யார்? இன்னும் சில மணி நேரங்களில் தெரிவிக்கப்படும்.

சுதந்திரமான, அமைதியான தேர்தலை உறுதி செய்ய விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • 13,421 வாக்களிப்பு நிலையங்கள்
  • தேர்தல் கடமைகளில் 150,000 அரச அதிகாரிகள்
  • 38 வேட்பாளர்கள் 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. அதற்கிணங்க இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை வாக்களிப்பு நடைபெறும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறுவதுடன், தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றுநிருபங்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது சம்பந்தமாக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை உரிய இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் நேற்றுக் காலை முதல் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றன.

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைவதுடன், அதனையடுத்து நள்ளிரவுக்கு பின்னர் தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏனைய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அந்த வகையில் உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை தகவல் திணைக்களத்தின் மூலம் ஊடகங்களுக்கு வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் உட்பட 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


Seq.NoSymbolName
1AKMEEMANA DAYARATHANA THERO
2ABUBAKAR MOHAMED INFAS
3SIRIPALA AMARASINGHE
5K.K. PIYADASA
6SARATH KEERTHIRATHNA
7K.A. KULARATNA
8K.R. KRISHAN
9PALLIMULLA KAPUGAMAGE ANURA SIDNEY JAYARATHNA
10DILITH JAYAWEERA
11SIRITUNGA JAYASURIYA
12MYLVAGANAM THILAKARAJAH
13AGAMPODI PRASANGA SURANJEEWA ANOJ DE SILVA
14LALITH DE SILVA
15AJANTHA DE ZOYSA
16ANURA KUMARA DISSANAYAKE
17MAHINDA DEWAGE
18ARIYANETHIRAN PAKKIYASELVAM
19VICTOR PERERA
20ANURUDDHA POLGAMPALA
21SAJITH PREMADASA
22SARATH FONSEKA
23DISSANAYAKA MUDIYANSELAGE BANDARANAYAKE
24SARATH BANDARANAYAKE
25BATHTHARAMULLE SEELARATHANA THERO
26NUWAN BOPEGE
27SARATH MANAMENDRA
28PEMASIRI MANAGE
29ANURUDDHA ROSHAN RANASINGHE
30JANAKA RATNAYAKE
31NAMAL RAJAPAKSHA
32NAMAL RAJAPAKSA
33WIJEYADASA RAJAPAKSHE
34A.S.P. LIYANAGE
35KEERTHIE WICKRAMARATNE
36PRIYANTHA WICKRAMASINGHE
37RANIL WICKREMESINGHE
38PANI WIJESIRIWARDENA
39OSHALA HERATH




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments