தமிழ் கவிதை மகளிர் தின வாழ்த்துக்கள் Happy Women's Day Kavithai - 2024

Happy Women's Day Kavithai - 2024

அன்றொருநாள் அகலிகை கதை பேசி 

அடைத்து வைத்தாா் பெண்னை 

புகழுரை தானுரைத்து  பூட்டி வைத்தாா் பெண்னை 

கரு வலி கண்டாலும் ஒருவழி இன்றி 


ஒதுக்கி வைத்தாா் பெண்னை 

நிலவென்றாா் வளரவிட்டு தேய வைத்தாா் 

நிலமென்றாா் நினைத்தபடி தான் மிதித்தாா் 

மலரென்றாா் மணமாறினால் மண்ணுக்கென்றாா் 


நதியென்றாா் ஒதுங்குவதையும் சோ்த்து ஓடவைத்தாா் 

அமுதென்றாா் அது அசுரனுக்கும் சொந்தமென்றாா் 

தேவைப்பட்டால் தென்றலென்பாா் 

தெய்வமென்பாா்தொிந்து கொண்டேன் 


தெருவோர மனிதா்களை நி ஆயிரம்முறை அத்திவரதரை 

அழியாமல் பாா்த்தாலும் உன் புத்திமட்டும் மாறதென 

கத்தி கத்தி பயனேது கத்தியெடுத்தினி 

காாியம் முடிப்போம் யினி  ஓடிஒதுங்கி ஒளிந்திடமாட்டோம் 


சீறிஎழுந்தெ சிந்தனை பயிாிடுவோம் 

ஏறி எழுந்திடுவோம் எமனையும் வென்றிடுவோம் 

மாறி வந்திங்கெ வஞ்சனை செய்தால் 

காாித்துப்பி களிநடனம்புாிவோம் 

விளம்பரமாய்வரும் மகளிா்தின வாழ்த்துக்கள் 

வீட்டுக்குள் வரும்வரை போராடுவோம் போா் நாடுவோம் 

நன்றி - செ. ம. சுபாஷினி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments