காற்றில் கலந்த ஓசை பிரித்து எழுதினேன் எழுத்தாய்,
"நானும் கவிஞன்" என கூறிக்கொண்டு!
நீதான் கவிஞனா? என்றது உலகம்.
நீயெல்லாம் கவிஞனா? என்றனர் மக்கள்.
தீப்பந்தம் ஏந்தி தெருவில் நடந்தேன்,
தீண்டாமை ஒழிக்க பேனா எடுத்தேன்,
திருடன் என்றது ஒரு கூட்டம்!
மேடை ஏறி முழக்கம் கொட்டினேன்!
அரங்கம் அதிர கவிதை மொழிந்தேன்!
கல்லை கொண்டு அடித்தனர்!
நான் ஒன்றும் கலிலியோ இல்லை
"கவிஞன்" என்றேன் நம்ப மறுத்தது உலகம்!
அதிகாலை நிலவு!, ஆர்பரித்து திரியும் விண்மீன்கள்!,
விடியலுக்காக ஏங்கும் வெண்பஞ்சு மேகங்கள்!,
தொலைந்து போன தன் இனத்தை தேடி அலையும்
ஒற்றை சிட்டுக்குருவியின் ஒப்பாரி பாடல்!.
அனைத்தையும் எழுதினேன்.
நான் கவிஞனாகி விடுவேனோ! என பயந்துகொண்டே?
எனக்கு மட்டுமே நான் கவிஞனானேன்!
இயற்கையை வர்ணித்து இயல்பாய் எழுதினேன்,
"திருட்டு கவிஞன்" பட்டம் கிடைத்தது!
"ஓசோன் இதயத்தில் ஓட்டை
அதற்கும் காதல் தோல்வியோ"!
கண்ணால் கண்ட காதலை எழுதினேன்,
'அனுபவ மொழி' என்றது பெண்கள் கூட்டம்!
இழப்பதற்கோ ஒன்றுமில்லை,
மானம் மறைப்பதற்கோ துண்டுமில்லை, விதி வந்தால் சாவேன்,
அதுவரையில் விதைத்துகொண்டே இருப்பேன்!
விவசாயம் பற்றி எழுதினேன்!
புதுப்புரட்சியாளன் பிறந்துவிட்டானோ!
புன்முறுவல் பூத்தனர்!
ஊரெங்கும் தீக்காடு, அனைத்து தீப்பிழம்புகளையும்
அணைத்துவிட்டு, ஓடோடி போய் மலையின் உச்சியில் நின்று பார்த்தேன்!
எங்கோ ஓர் இடத்தில் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது,
சாதி என்னும் கொடிய "தீ" தீண்டாமை பற்றி எழுதினேன்
தீண்டதகாதவன் என திருப்பி அனுப்பினர்!
கவிதை என்றாலே, வீதியினர் விரட்டியடித்தனர்,
தெருவினர் துரத்திஅடித்தனர்,
என் கவிதைகளே என்னை திருப்பி அடித்தது,
அனைவரும் ஏற்க மறுத்த நிலையில்
நான் என்ன கவிஞனா?
எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
என் கவிதைகளை அள்ளிகொண்டேன்.
சென்றேன் மயானத்திற்கு! எங்கும் அமைதி,
"ஓஹோ"இதுதான் எனக்கேற்ற இடமோ!
அமைதியில் உறங்கிப்போனேன்.
இறுதியில் என்னை கவிஞனாய் ஏற்றுக்கொண்ட இந்த உலகம்
என் கல்லறையில் வந்து எழுதி சென்றது,
"கவிஞன் காலமாகிவிட்டான்" என்று!
இப்பொழுது உரக்க கூற விரும்புகிறேன்
"நான் கவிஞனல்ல" என்று!
நன்றி - C. RAJAPANDI
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments