கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் 2024 ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.
அதற்கமைவாகச் சகல பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும் எனவும் அத்தோடு இவ்வாண்டு தொடக்கம் க.பொ.த. (சா.தர)ப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கவிருக்கும் சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளிடமும் தேசிய அடையாள அட்டை இருப்பது கட்டாயமானதாகவும் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாத 15 வயதிற்கும் குறைவாக உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் க.பொ.த. (சா.தர)ப் பரீட்சைக்காகத் தோற்றுவதற்கு எதிர்பார்ப்பின் அவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்காகப் பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதருவதும் கட்டாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் நுழைந்து உரிய அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய பிழையின்றி விண்ணப்பத்தைச் சமரப்பிப்பதோடு விண்ணப்பத்தின் அச்சு பிரதியைப் தேவையேற்படுமிடத்து சமர்ப்பிப்பதற்காகப் பாதுகாப்பாகத் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனவும் 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments