உன்னிடம் பேச இனி என்ன
இருக்கிறது என்னிடம் மயில் இறகே...!!
என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும்
தனிமை என்னும் பசிக்கு இரையாக
விட்டு விட்டேன் கலை மகளே...!!
நான் வார்த்தை அற்றவனாக தான்
திரிகிறேன் இத்தனை காலமும்
இனி நீ வந்துஎன்னிடம்
என்ன பேச போகிறாய் கண்ணே....!!
இத்தனை காலமும் பேசாத வார்த்தைகளை
இந்த ஒரு நாளிலா பேசப் போகிறாய் பெண்ணே...!!
வேண்டாம்.... மெளனமாகவே
பார்த்துக் கொள்ளுவோம் மௌனங்களினூடே
காலம் கடந்து வோம் மௌனமாகவே
பிரிந்து செல்வோம்
வார்த்தைகள் தொலைத்த நமக்கு
மௌனம் ஒன்றே காதல் மொழி:
காதலைத் தொலைத்த நமக்கு
மௌனம் ஒன்றே பேசும் வழி: கண்மணியே....!!
நன்றி - Yothika
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments