உன் நினைவுகளில் நானும்
என் நினைவுகளில் நீயும்
நீங்காது நிலைத்திருக்க
தூரமும் தொலைவும்
நம்மை சூழ்ந்திருக்க
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்களாய் ,
நேரமறியாத நிசப்த இரவுகளில்
காதுமடல் சுட்டதையும்
கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்
பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்கள்
பேசிக்கொண்டே ஓர்முறை
நானுறங்கிப்போக
துண்டிக்க மனமில்லையென
தொடர்ந்து கொஞ்சினாய்
என் மௌனத்தை..
உன் கண்களால் என்னை
கட்டியணைத்து
காதலில் திளைக்கச் செய்து
விழிநீர் துடைத்து
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீயாக
உன் புகைப்படத்தில் முகம் புதைத்து
காலம் யாவும் கழித்திடுவேன்
தொலைதூரத்தில் என் தொலையாத
தொல்லையாக என்றும் நீ
நன்றி - வைஷ்ணவி க ரா
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments