வீரப்பழம் Veerapalam or Herofruit - Sltamil

Veera Palam (Hero Fruit)

வீரப்பழம் Drypetes sepiaria என்பது  புத்ராஞ்சிவேசியே Putranjivaceae குடும்பத்தில் உள்ள ஒரு வகை சிறிய மரமாகும். இந்த மரம் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றது. இது பருவக்காடுகள் மற்றும் புதர் நிலங்களில் வளரும். இது மலையாளத்தில் வெள்ளகாசவு எனவும் தமிழில் - வீரமரம், வெள்ளிலம்பு, வீரை, ஆடுமிழுக்கன், காயலக்கமரம் உள்ளிட்ட பல உள்ளூர் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

வீரப்பழம் மனித வாழ்நாள்களில் ஒரு முறையாவது சாப்பிட வேண்டிய அரிய வகை பழமாகும். வீரைப்பழம் இலங்கையிலும் இந்தியாவிலும் காணப்படுவதாக அறிப்படுகின்றது. அதனால் தமிழ் பெயர்களில் மாத்திரமே பெயர் காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் Drypetes Sepiaria என்று அழைக்கப்படுகின்றது (Hero Fruit) என பெயர் கொள்ளலாம்.

மரத்தில் உண்ணக்கூடிய வெப்பமண்டல பழங்கள் உள்ளன. அதன் தண்டு முதிர்ந்த கிளைகளில் வேலியாகவும்  பயன்படுத்துகிறது மற்றும் வேலியை பின்னர் விறகாகப் பயன்படுத்துகிறது.

இதன் பழங்கள் கருஞ்சிவப்பு நிறத்திலும், காய்ப்பருவம் பச்சை நிறத்திலும், முதிர்ந்த பழம் செம்மஞ்சல் நிறத்திலும் சிறிய கோள வடிவத்திலும், இருக்கும். இதன் பழங்கள் பழங்கள் கொத்துக்களாக காய்க்கும்.

இலைகள் கொத்துகளாக காணப்படும்.  முதிர்ந்த இலைகள் அகலமான ஓவல்-நீள்சதுர வடிவமாகவும், அடியில் வட்ட வடிவமாகவும் மேல்புறம் பளபளப்பாகவும் இருக்கும். இளம் இலைகள் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும், அவை முதிர்ந்தவுடன் கரும் பச்சை நிறமாக மாறும். தண்டு பெரும்பாலும் முறுக்கேறியது, முறுக்கப்பட்ட அல்லது புல்லாங்குழல், திடமான கிளைகள்  உடையது.

வீரப்பழம் மலர்கள் Veera Palam Flower

வீரப்பழம்

வீரப்பழம் Veera

வீரப்பழம்

வீரமரம் இலைகள் Hero Fruit leaves.

வீரப்பழம்


வீரப்பழத்தின் மரக்கட்டை Hero Fruit Stem

வீரப்பழம்

Note - நண்பர்களே வீரைப்பழம் பற்றிய மேலதியக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால். அல்லது சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் கீழே (Comment) பதிவிடவும்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments