அறியாப் பருவத்தில்
அறிந்தேன் காதலை
இதைக் காதல் என்பதா
புரியாமல் தவிக்கிறேன்
புரிந்தது போல் நடிக்கிறேன்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
தென்றல் சுடுகிறது .
தீயும் இதமாய் இருக்கிறது.
சந்தித்துப் பிரினரிந்த நினைவெல்லாம்
இதயத்தை இறுக்குகிறது.
நிலவைப் பார்க்கும் போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது உன் முகம்
மழைகாலங்களில் மட்டுமே
தெரிவதில்லை என் கண்ணீர்
மழைக்கு என் நன்றி
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழிய மறுக்கிறது.
என் முதல் காதல்
ஆண்டுகள் கடக்கலாம்
கடக்கவில்லை உன் நினைவுகள்
உன் நிழலோடு வாழ்கிறேன்
மீண்டும் பிறந்தால்.
காதலிப்போம் பிரியாதிருப்போம்.
நன்றி - இலக்கியா
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.
0 Comments