சொற்களின் வகைகள் - Types of Words

சொற்களின் வகைகள் - Types of Words

சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.

பாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.

பொருள் உணர்த்தும் அடிப்படையில் மூன்று வகைப்படும்.

  • ஒரு மொழிச் சொல் 
  • தொடர் மொழிச் சொல் 
  • பொது மொழிச் சொல் 

வழக்கு அடிப்படையில்  இரண்டு வகைப்படும்.

  • தகுதி வழக்குச் சொல்
  • இயல்பு வழக்குச் சொல்

தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். 

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

01-பெயர்ச்சொல் Tamil Noun

சொற்றொடரின் பகுதி.ஆள், பொருள், இடம் ஆகியவற்றினைக் குறிக்கப்பயன்படும் சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

  1. பொருட் பெயர்
  2. இடப் பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப் பெயர்
  5. பண்புப் பெயர்
  6. தொழிற் பெயர்

என ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது".

தொல்காப்பிய விளக்கம்

நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ் அறுபொருள்.

நன்னூல் விளக்கம்

'இடுகுறி காரண மரபோடு ஆக்கம் தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'

எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்
இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

நன்னூல் விளக்கம்

'இடுகுறி காரண மரபோடு ஆக்கம் தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'

எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்
இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

02-வினைச்சொல் - Verb

ஒரு குறிப்பிட்ட செயலினைக்குறிக்கும் சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும்.

  • தெரிநிலை வினைமுற்று 
  • குறிப்பு வினைமுற்று 

எச்சம் இரண்டு வகைப்படும்.

  • பெயரெச்சம்
  • வினையெச்சம்

ஒரு வினையானது (செயலானது) முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும்.

முற்று என்றால் என்ன?

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்.

வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்

03-இடைச்சொல் Interjection

இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் சில வகைகள் வருமாறு:

1.வேற்றுமை உருபுகள்- வேற்றுமையில், உருபுகள் இல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் நீங்கலாக எஞ்சிய ஆறு வேற்றுமைகளுக்கும் உரிய அசை உருபுகள். 2.விகுதிகள்- அன், அள், உம், து போன்றன. 3.இடைநிலை- த், ட், ற், ன், கிறு, ப் போன்றன. 4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன. 5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன.

சில எடுத்துக்காட்டுகள்:

கவிதாவைப் பார்த்தேன் - ஐ
மற்று அறிவாம் நல்வினை - மற்று
மலர் போன்ற கை - போன்ற
வந்தான்- ஆன்
அக்காளை, இக்காளை - அ, இ
சென்றானா?- ஆ

இவற்றுள் ஐ என்பது வேற்றுமை உருபு.
மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல்.
ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி.
போன்ற என்பது உவமையை உணர்த்தும் உவமை உருபு.
அ, இ என்பன சுட்டெழுத்துகள்
ஆ என்பது வினா எழுத்து
இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.

04-உரிச்சொல் Adjective

உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல்.[1] ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.

ஒப்பீட்டு விளக்கம்

ஆங்கிலத்தில் இதனை Synonym என்கின்றனர். தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும் குறைசொல்லாகவும் வரும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.

செல்லல், இன்னல், இன்னாமையே. - இது முழுச்சொல்லாக வந்த உரிச்சொல் வகை.
தடவும் கயவும் நளியும் பெருமை. - தடமருப்பு எருமை, கயவாய் மதகு, நளியிரு முந்நீர் - இவற்றில் தட, கய, நளி என்னும் உரிச்சொற்கள் குறைசொற்களாக உள்ளன.

பாகுபாடும் விளக்கமும்

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், "உரிச்சொல்" என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் "உரிச்சொல்" இறுதியாக வருகிறது. உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். "உரி" என்னும் அடைமொழியைச் "சொல்" என்பதனோடு சேர்த்து "உரிச்சொல்" என்றனர்.

உரிச்சொல்லின் வகைகள்

உரிச்சொல் இருவகைப்படும்

  1. ஒருபொருட்குறித்த பலசொல்
  2. பலபொருட்குறித்த ஒருசொல்

ஒரு பொருள் குறித்த பல சொல்

  • சாலப்பேசினான்.
  • உறுபுகழ்.
  • தவஉயர்ந்தன.
  • நனிதின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.

பலபொருட்குறித்த ஒருசொல்

கடிமனை - காவல்
கடிவாள் - கூர்மை
கடிமிளகு - கரிப்பு
கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்

உரிச்சொல் குறிப்பவை


உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு:

உயர்திணைப் பண்புகள்

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை,

  1. அறிவு
  2. அருள்
  3. ஆசை
  4. அச்சம்
  5. மானம்
  6. நிறைவு
  7. பொறை (பொறுமை)
  8. ஓர்ப்பு (தெளிவு)
  9. கடைப்பிடி
  10. மையல் (மயக்கம்)
  11. நினைவு
  12. வெறுப்பு
  13. உவப்பு (மகிழ்வு)
  14. இரக்கம்
  15. நாண்
  16. வெகுளி (கோபம்)
  17. துணிவு
  18. அழுக்காறு (பொறாமை)
  19. அன்பு
  20. எளிமை
  21. எய்த்தல் (சோர்வு)
  22. துன்பம்
  23. இன்பம்
  24. இளமை
  25. மூப்பு
  26. இகல் (பகை),
  27. வென்றி (வெற்றி)
  28. பொச்சாப்பு (பொல்லாங்கு)
  29. ஊக்கம்
  30. மறம்
  31. மதம் (வெறி)
  32. மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.

அஃறிணைப் பண்புகள்

நன்னூல், 454-ஆவது நூற்பா அஃறிணைப் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.

வடிவங்கள்

வட்டம்
இருகோணம்
முக்கோணம்
சதுரம் முதலிய பலவகைளும்

நாற்றங்கள்

நறுநாற்றம்
துர்நாற்றம்

வண்ணங்கள்

வெண்மை
செம்மை (சிவப்பு)
கருமை
பொன்மை (மஞ்சள்)
பசுமை

சுவைகள்

  1. கைப்பு (கசப்பு)
  2. புளிப்பு
  3. துவர்ப்பு
  4. உவர்ப்பு
  5. கார்ப்பு (காரம்)
  6. இனிப்பு

எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள்

  1. தொகு
  2. வெம்மை (வெப்பம்)
  3. தண்மை (குளிர்ச்சி)
  4. மென்மை, வன்மை
  5. நொய்மை (நைதல்)
  6. திண்மை
  7. இழுமெனல் (வழவழப்பு)
  8. சருச்சரை (சொரசொரப்பு)

இரண்டிற்கும் பொதுவான பண்புகள்

உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455).

  1. தோன்றல்
  2. மறைதல்
  3. வளர்தல்
  4. சுருங்கல்
  5. நீங்கல்
  6. அடைதல்
  7. நடுங்கல்
  8. இசைத்தல்
  9. ஈதல்
  • தமிழிலக்கணம்
  • பெயருரிச்சொல்
  • வினையுரிச்சொல்
  • இலக்கணம்
  • ஆங்கிலவிலக்கணம்
  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • மொழி


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments