கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
என் கண்கள் தெரியாமல் பார்த்த பிழை நீ
என் இதயம் தெரிந்தே நேசித்த உயிர் நீ
ஒரு ஆணின் வாழ்க்கையில் அழகாக இருக்கும்
பெண்ணெல்லாம் தேவதை அல்ல
அவனது வாழ்க்கையை அழகாக
மாற்றும் பெண்ணே தேவதை
நிலாவில் நீர் இருக்கிறதா? இல்லையா?
என்ற கேள்விக்கு இருக்கு என்று
பதில் கூறியது அவளது கண்கள்
ஒரு துளி கண்ணீர் விட்டு
கங்கையில் குளித்தும் தீராத என் பாவங்கள்
அவள் கண்களை துடைக்கும் பொழுது
அவள் கண்ணீர் பட்டு தீர்ந்துவிட்டது
கண்ணிருக்கும் கவிதைக்கும் சிறு வித்யாசம் தான்
கண்ணீர் அவள் கண்ணால் எழுதப்பட்டது
கவிதை அவள் கண்ணுக்காக எழுதப்பட்டது
என் தாயின் கருவறையில் நான் கண்ட சுகத்தை
மீண்டும் உன் கருவிழியில் தான் கண்டேன்
அங்கிருக்கும் நிலவினை
என் கையில் பிடிக்கிறேன்
உன் கையை பிடிக்கும் பொழுது
மூச்சு உள்ளவரை உனக்காக இருப்பேன்
அப்படியே நான் இறந்தாலும்
நீ சுவாசிக்கும் காற்றாக வந்து உன் மூச்சில் இருப்பேன்
என் கவிதைகள் யாரும் கண்ணீர் விடுகிறது,
யாருக்காக நாம் எழுதப்பட்டோமோ ,
அவர்கள் நமக்காக எழுதப்படவில்லையே என்று
நன்றி - S.A .Vijayanand
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments