கணினியின் வன்பொருள், மென்பொருள், உயிர் பொருள் - Computer Hardware, Software, Liveware

கணனியின் வன்பொருள், மென்பொருள்,  உயிர் பொருள்


கணினியின் பகுதிகள் Parts of a Computer

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.

கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.

கணினியுடன் சம்பந்தமான முக்கிய பாகங்களை  உண்மைபின்வருமாறு வகைப்படுத்தலாம்

  1. வன்பொருள் - Hardware
  2. மென்பொருள் - Software 
  3. உயிர் பொருள் - Liveware


01. வன்பொருள் - Hardware

கணனியில் தொட்டு உணரக்கூடிய பாகங்கள் அனைத்தும் வன்பொருள் (Hardware) ஆகும்.

Hardware பாகங்கள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

  • உள்ளீட்டு சாதனம் - Input Devices
  • வெளியீட்டு சாதனம் - Output Devices
  • மத்திய செயலாக்க அலகு - CPU
  • நினைவகம் - Storage Devices

உள்ளீட்டு சாதனங்கள் - Input Devices 

கணினியின் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகின்ற சாதனங்கள் அனைத்தும் உள்ளீடு சாதனங்கள் எனப்படும்.

Eg 

  • Key Board
  • Mouse
  • Light Pen
  • Joysticks
  • Web Camera
  • Mic
  • Barcord Reader
  • Digital Camera 


வெளியீட்டுச் சாதனங்கள் Output Devices

கணினியின் தரவுகளை வெளியீடு செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் வெளியீட்டு சாதனம் எனப்படும்.

Eg

  • Monitor
  • Printer
  • Speaker
  • Plotter
  • Projector


மத்திய கட்டுப்பாட்டு பகுதி - CPU (Central Processing Unit)

System Unit இன் CPU ஒரு பகுதியாகும். மத்திய பட்டு கட்டுப்பாட்டு பகுதியை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

  • ALU
  • Control Unit
  • Storage/Memory
  • ALU (Arithmetic Logic Unit)


கணினியில் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் சம்பந்தமான கணித வேலைகளைச் செய்வதற்கும் தரவுகளை ஆராய்ந்து தர்க்க ரீதியான முடிவுகளை பெறுவதற்கும் இப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.


கட்டுப்பாட்டகம் - Control Unit

கணினியில் விளங்குகின்ற தரவுகளைவாங்குவதிலிருந்து அதனை செயல்படுத்த உரிய இடங்களுக்கு அனுப்புதல், வெளியிடுதல், சேமித்தல் தொடர்பான சகல வேலைகளுக்கும் உரிய கட்டளையைப் பிறப்பிக்கின்ற பகுதி இதுவாகும்.


சேமிப்பகம் Memory Unit

கணினியில் சேமிப்பதற்கு பயன்படுத்தும் அழகுகளை இதன் மூலம் அளக்கலாம். கணினியின் கொள்ளளவு அளப்பதற்கு பயன்படுத்தப்படும் அளகுகள். 

Memory Unit

  • Bits
  • Bite
  • Kilo byte
  • Mega byte
  • Giga byte
  • Tera byte

Memory Size

  • 8 bits = 1 byte
  • 1024 byte = 1024 KB
  • 1024 KB = 1024 MB
  • 1024 MB = 1024 GB
  • 1024 GB = 1024 TB

கணினியில் உள்ள சேமிப்பகங்களில் இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம்

  1. பிரதான சேமிப்பகம் Main Memory
  2. இரண்டாம் நிலை நினைவகம் Secondary Memory

பிரதான சேமிப்பகம் Main Memory

பிரதான சேமிப்பகத்தில் இரு வகைகள் உண்டு

  1. ROM (Read Only Memory)
  2. RAM (Random Access Memory)

படிக்க மட்டும் நினைவகம் ROM (Read Only Memory)

வாசிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நினைவகம் இதுவாகும் இதில் உள்ள தரவுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் அழிக்கப்படமாட்டாது இது நிரந்தர நினைவகம் எனவும் அழைப்பர்.


சீரற்ற அணுகல் நினைவகம் (RAM (Random Access Memory)

இதனை சீரற்ற சேமிப்பகம் என அழைப்பர் இதில் உள்ள தரவுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அழிக்கப்பட்டுவிடும்


இரண்டாம் நிலை சேமிப்பகம் Secondary Memory

இதனை துணை சேமிப்பகம் என அழைப்பர் நாம் எமது தரவுகளை சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும் சேமிப்பகங்களில் இதனோடு அடக்கலாம் இதில் இருவகையுண்டு

  1. Magnetic Media காந்த ஊடகம்
  2. Optical Media ஆப்டிகல் மீடியா


Magnetic Media காந்த ஊடகம்

தகவலைப் பிரதிநிதித்துவப்படுத்த காந்த வடிவங்களைப் பயன்படுத்தும் எந்த சேமிப்பக ஊடகமும் காந்த ஊடகமாகக் கருதப்படுகிறது.

Eg

  • Hard Dick
  • Floppy Dick
  • Pen Drive / Flash Drive
  • Magnetic Tap


Optical Media ஆப்டிகல் மீடியா

Optical Media ஆப்டிகல் மீடியா

ஒளியியல் ஊடகம் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகள் பரவும் பொருள். இது பரிமாற்ற ஊடகத்தின் ஒரு வடிவம்.

Eg

  1. CD (Compact Disc)
  2. DVD (Digital Versatile Disc)

DVD (Digital Versatile Disc)

DVD பழைய தொழில்நுட்பம் என்றாலும், பெரிய அளவிலான தரவுகளை (சுமார் 4.7 ஜிபி) மற்றும் ப்ளூ-ரே உள்ளடக்கம் போன்ற உயர் வரையறைப் பொருட்களைச் சேமிக்க இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

CD (Compact Disc)

CD மிதமான அளவு தரவுகளை (சுமார் 700 MP) சேமித்து வைத்திருக்கும் அடிப்படையில் தற்போது பெரிதாக பாவனையில் இல்லை.


02. மென்பொருள் Software

கணனியில் தொட்டு உணர முடியாததும். கணினியின் வன் பொருள்களை இயக்குவதும் எமது தேவைக்கு பயன்படுத்துவதுமான பகுதிகளே மென்பொருள் எனப்படும். இதனை மூன்று வகைப்படுத்தலாம்.

  1. முறைமை மென்பொருள் System Software
  2. பிரயோக மென்பொருள் Application Software
  3. நிலைப்பொருள் Firmware


முறைமை மென்பொருள் System Software

கணினியை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் Software System Software எனப்படும்.

  • Windows 95
  • Windows 98
  • Windows me
  • Windows 2000
  • Windows nt
  • Windows xp
  • Windows vista
  • Windows 7
  • Windows 8
  • Windows 8.1
  • Windows 10
  • Windows 11

பிரயோக மென்பொருள் Application Software

நாம் எமது தேவைக்கு பயன்படுத்துகின்ற Software அனைத்தும் Application Software எனப்படும்.

  • Word
  • Excel
  • Power Point
  • Access
  • Photoshop
  • Games
  • Media players
  • development tools 
  • Database programs
  • spreadsheets
  • web browsers

நிலைப்பொருள் Firmware

கணினியில் உள்ள Hardware காணப்படுகின்ற Software இதில் உள்ளடக்கலாம்.

Computer இல் Firmware என்பது ஒரு கணினி நிரலாகும், இது ஒரு வன்பொருள் சாதனத்தில் "உட்பொதிக்கப்பட்ட" மற்றும் வன்பொருளின் இன்றியமையாத பகுதியாகும். இது சில நேரங்களில் உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு உதாரணம் மைக்ரோகண்ட்ரோலர், நுண்செயலியின் ஒரு பகுதி, இது நுண்செயலிக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

  • Bios


03. உயிர்ப் பொருள் Live Ware

கணினிக்கு முன்பாக இருந்து கணினியை இயக்க அவர்களை இதில் அடக்கலாம்.

மென்பொருள் பொறியாளர், வன்பொருள் பொறியாளர்கள், மேலாளர்கள், நெட்வொர்க் பொறியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் போன்றவற்றை லைவ்வேரின் எடுத்துக்காட்டுகள் உள்ளடக்கும்.

  • Typist
  • Computer operator
  • Designer
  • Analyzer
  • Programmer



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments