கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை விதை நெல்
குளிர்கால போர்வையின்றி தவித்த போது போர்வையாக நீ இருந்து என்னை அணைத்துக் கொண்டவளே.என்னை மறந்து சென்று விட்டாய் மறக்க முடியா நினைவாக என் நெஞ்சில்..ஆழ்ந்த இரங்கல்கள் பல சொல்லி நின்ற போதும்நீங்க சொல்லும் கதை இங்கே சொல்லத்தான் யாருமில்லை பூமியிலே...கதைகள் பல சொல்லி நல்லொழுக்கம் கற்பித்த கடவுள் நீ.ஏன் சென்றீர் வான் உலகம் கதைக்கேட்கும் நெஞ்சம் இங்கு இருக்க..சொர்க்கம் எனும் உலகுக்குள் சென்று விட்டாய் அங்கு இருக்கும் அனைவருக்கும் நல்லொழுக்க கதை சொல்ல.ஓய்வெடுக்க சென்று விட்டீர் ஓய்வின்றி உழைத்தவரே, உத்தமரே, உயர்வாக வாழ்ந்தவரே, தமிழ் அன்னை மடியினிலே தவழ்ந்திடத்தான் சென்றாயோ..விஞ்ஞானம் பல இருந்தும் விதை நெல்லை திரும்பத்தான் மீட்க இன்னும் முடியவில்லை.நீ சென்ற வழி தெரியவில்லை எப்படித்தான் தேடுவது. கற்றுத்தந்த பாடத்தை கடைபிடித்து வாழ்ந்திடுவேன் உன் பெயர் போற்றி சொல்லும் அளவில்.
நன்றி - சண்முகம் மு
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments