கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
நதிகளின் நயனங்களும்
நாதஸ்வர ஒலிகளும்
நாட்டியத்தின் நளினங்களும்
நலம்தானா என்கின்றன என்னிடம்!
மழைத்துளிகள் மௌனமாய்
மழலை மொழி பேச
மாட்சி நிறைந்து மண்ணுலகம்
மகுடம் தரித்துள்ளது இவ்வேளையில்!
காற்றினில் அசைந்து வருகின்ற
கீதங்கள் காதினில் இனிமையெழுப்ப
கானபறவைகள் மெதுவாய் பாட
கரங்கள் தாளம் போடுகின்றனவே!
பச்சை நிற பட்டாடை உடுத்திய
வயல் நிலங்களில் _ பறந்து
செல்கின்ற கிளிகளைப் பார்க்க
கண்களிரண்டும் போதவில்லையே!
விண்மீன்கள் விழிகளை சிமிட்டி
வியப்படைய செய்யவே
வியப்புற்று நிற்கின்றேன்
விந்தையான இயற்கையினாலே!
இன்பமாய் பாடும் பறவைகளின்
இசையில் நனையும் என் செவிகள்
இணைந்து நிற்கும் இயற்கை
இடைவிடாது தொடரும் என்றும்!
கடிகார ஓசையிலே _ என்
கண்கள் விழிக்கப் பெறவே
கடலலைகள் ஓடி வந்து
கரையோடு மோதி செல்கிறதே!
தாவிக் குதிக்கும் வானரங்கள்
தாழிசை பாடல் இயற்றுதே
தாயை பிரிந்த கன்றுகளும்
தவிப்பது இயற்கையின் அழகே!
மழைத்துளிகள் மண்ணில் விழவே
மகிழ்ச்சி கொண்ட சிறார்களாய்
மன கதவைத் திறந்து இயற்கையின்
மடியினில் தவழ்ந்தோமே!
தடம் பதித்த அவனியில்
மரங்கள் ஆடுகின்றன காற்றினில்
வரம் பெற்று விட்டேன் மண்ணில்
கரம் பற்றி இணைய இயற்கையில்
நன்றி - Nagakumar Sailaja
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments