கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை என் அம்மா
கருவில் சுமந்து
நெஞ்சம் மகிழ்ந்து
துடிப்பில் இன்புற்று
எட்டி உதைக்கும் போது
அகம் உருகி
நெளிந்திடும் போது
உடல் மெலிந்து
உலகம் காண
வெளிவரும் போது
உன் உயிர் கொடுத்து
அழகு முகம் பார்த்தவுடன்
அத்தனையும் மறந்து
சிரிப்பில் மெய் சிலிர்த்து
அழுகையில் பாலூட்டி
அடி எடுத்து வைக்கும் போது
நிலா காட்டி சோறூட்டுவாள்.
பிஞ்சு விரல் பிடித்து
நெஞ்சுருகி நிற்பாள்.
பிள்ளையின் வயிராற்ற
பிள்ளையாக மாறுவாள்.
தன் பிள்ளையின் வளர்ச்சி
கண்டு வாடாத தெய்வம்.
அம்மா என்ற சொல்லிற்கு
நிகர் அம்மா மட்டுமே!
நன்றி - ஆ. ஆர்த்தி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 Comments