கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
உதிர்ந்த ரோஜா பூக்கள் காயும். ஆனால்,
நீ உதிராத ரோஜா தோட்டமாய் இருந்து,
பார்வைக்கு இதமாய், காட்சிக்கு அழகாய்,
காண்போரை வியக்கச் செய்து,
காணும் இடமெல்லாம்,கண்டு மகிழ,
எங்கும் பூத்து நிற்கின்ற ரோஜா கூட்டமே,
ஒவ்வொரு வினாடியிலும்,
என் நினைவில் வாழ்ந்து,
நீரில் அழியாத வார்த்தையும்,
நெருப்பில் பொசுங்காத அன்பையும் கொடுத்து,
என் அறிவுமிக்க ஆசானாக,
என் நலம் பாடும் நண்பராக,
தன்மானம் காத்து நிதம் தரணிக்கு புகழ் சேர்க்கும்
காதல் புனிதமான காதல், நம் காதல் தான்
நன்றி - வ.பத்மினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
.jpg)




0 Comments