கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வறுமையின் பசி
ஏழையின் விதி கடவுளின் பரிசு
பசி என்ற பிணிதான் எங்களுக்கு நோய்!
பசி தீர மருந்து அருந்துகின்றனர் மனிதர்கள்.
எங்களின் வயிராற்ற நாங்கள் என்ன மருந்து உண்பது,
மனிதன் சிந்தும் ஒவ்வொரு உணவிலும்
எங்களின் உயிர் உள்ளது என்பதை எப்போ அறிவார்கள்?
பசி வந்தால்கண்ணுக்கு தெரிவது
என் பிஞ்சு சிசுவின் கண்ணீர்.
பச்சிளம் சிசுவின் கண் துடைக்க
ஏதாவது வழி உண்டோ?
ஆயிரம் பேருக்குஇலை போட்டு மகிழும்
கல்யாண வீட்டில் ஒரு ஏழைக்கு இலைபோட்டுப்பார்
குளிரூட்டியல் உண்போர் மத்தியில்
குளிரில் உண் போரின் வலி அதிகம்.
அவ்வலியை உணர்வோர் எவ்வழி உண்டு?
உணவை வீணாக்காதீர்கள் அது கிடைக்காமல்
அன்றாடம் காத்திருப்போர் ஆயிரம்.
என்றாவது ஒருநாள் இவ்விதி
மாறும் என்ற நம்பிக்கையில்
நாங்கள்- ஏழையின் கண்ணீர்!....
நன்றி - ஆ. ஆர்த்தி
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments