கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை பஞ்சபூதங்கள் ஈர்க்கும் கவிதை பூக்கள்
நீர் அறியாத கவிதைகள் ஓடாத குட்டை நீர்
நீர் அறிந்த கவிதைகள் ஓடும் நெட்டை நீர்
சுவாசமில்லா கவிதைகள் திரவுருவமான நின்ற காற்று
சுவாசமுள்ள கவிதைகள் அருவுருவமான தென்றல் காற்று
கற்றாத கவிதைகள் சுற்றாத நரக பூமி
கற்கும் கவிதைகள் சுற்றும் சொர்க்க பூமி
ஈரமில்லா கவிதைகள் கோடைகால வறண்ட மேகம்
ஈரமுள்ள கவிதைகள் மழைகால திரண்ட மேகம்
நெருங்காத கவிதைகள் தகிக்கும் நெருப்பு
நெருங்கும் கவிதைகள் ஈர்க்கும் நெருப்பு
சத்தியாவின் சத்தியமான கவிதை பூக்கள்
படிக்கும்போது மயக்காத கவிதை பூக்கள்
உணரும்போது மயக்கும் கவிதை பூக்கள்
நன்றி - Prapanchadasan sathya
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments