கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
சொல்ல தெரியாத அன்பு கொண்டவன்
சொல்ல முடியாத அனுபவ அறிவு கொண்டவன்.......
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் காவலன் அவன்
பாசத்திலும் பாராட்டிலும் காதலன் இவன்......
வார்த்தைகளில் பாசம் காட்டத் தெரியாதவன்
நேசத்தில் நேர்மை கொண்டவன்......
விட்டு விலகி விலகி சென்றாலும்
விட்டுக் கொடுக்காமல் எட்டிப் பிடிப்பவன்.....
இருபது வருடம் தோளிலும் மார்பிலும் தாங்கியவன்
தோழனைப் போல் துணை நின்றவன்.....
அறிவுரை கொடுக்கும் என் முதல் ஆசான்
அதிரடி அன்பில் அன்னையை மிஞ்சியவன்.....
கஷ்டங்கள் வரும் போது என் கரம் தேடும் உன்னை
மகிழ்ச்சி சூலும் போது என் மனம் தேடும் உன்னை.....
நீ இருக்கும் பொழுது உன் பாசம் புரியவில்லை எனக்கு
என்னை விட்டு செல்ல எப்படி மனம் வந்தது உனக்கு.....
மறைந்து விட்டாய் நீ இந்த மண்ணை விட்டு
மறந்து விடாது என் மனம் என்றும் உன்னை விட்டு.....
உன் பிரிவு என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது
இன்றும் உன் வார்த்தைகள் என்னை வாழ்த்துகிறது.....
என்னுடன்தான் இருக்கிறாய் என்பது என் மனதின் கணிப்பா
என் நினைவில் மொத்தமும் நீதானே என் அன்பு அப்பா......
நன்றி - மு.பிரேம் குமார்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments