கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வரத்தின் பெயர் தாய்மை
ஈன்றெடுத்தால் என்னை
வலியின் விளிம்பில் உலகம் அறியும் படி.....
புகட்டி வளர்த்தாய் உன் பாலினை
செந்நீராக வியர்வை வழியும்படி....
சுருக்கி விடமாட்டேன்
தாய்மை என்னும்
மூன்றெழுத்தை..
மூவுலகிற்கும் உணர்த்தத் துடிக்கிறேன்
என் வாழ்நாளில் விளிம்பில்
தாய்மை என்னும் நினைவிடத்தை.....
நீ கண்ட
காலக்கடலின் காரிருளை
எவ்வழியில் நீக்குவது
என்று தெரியாமல் புகட்டிய பாலோ
செந்நீராக வெளிவந்து நிற்கிறது
உன் துயர்கண்டு.....
மரத்தின் இலைகளோ துயர்களாக
உதிரத் தொடங்குகின்றன
தாய்மை என்னும் வரத்தினை பெற்றதினால்....
தாய்கண்ட துயர்களை
இயற்றத் தொடங்கினேன்
வரிகளாக ...
அதற்கு சூட்டப்பட்ட
பெயரோ தாய்மை....
நன்றி - கதிர் செல்வன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments