குமரிக்கண்டம் Kumarikkandam (Lemuria)

கடலில் மூழ்கிய குமரிக்கண்டம்

20,000 வருடத்திற்கு முன் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம்

குமரிக் கண்டம். இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக் கண்டமும் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலத்தீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்ததே குமரிக் கண்டம் என்று அறிவியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இதன் கடல்வழிப்பாதை ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. இது ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்..

இந்த நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே ஒரு மாபெரும் நிலப்பகுதியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

பாண்டிய நாட்டில் கூறப்படும் புராணக் கதைகள் குமரிக்கண்டம் இருந்ததற்கு மேலும் வலு சேர்க்கிறது. குமரிக்கண்டம் பாண்டிய மன்னர்களினால் ஆளப்பட்டது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் மூதாதையர் வாழ்ந்ததும், நம் தாய்த் தமிழ் பிறந்ததும் இங்கே தான். இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்.

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் 49 நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான 3 நகரங்கள் இருந்தன.

மேலும் குமரிக்கண்டதை ஆண்ட பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் இயற்கை பேரழிவுகள் காரணமாக குமரிக் கண்டம் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது என்றும் கூறுகின்றனர். சுமார் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இப்போது இருப்பதை விட 100 மீட்டர் குறைவாக இருந்தது என்று இந்தியாவின் தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும் கடல் மட்டத்தின் உயர்வும், குமரிக்கண்டம் கடலில் மூழ்கியதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

பேரழிவுகளுக்கு பின் அங்கு வாழ்ந்த மனிதர்கள் மூன்று திசைகளிலும் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் 1960 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் குமரிக்கண்டம் இருந்தது என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

எனவே குமரிக் கண்டம் என்பதே வெறும் கற்பனை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மேலும் குமரிக்கண்டம் குறித்த ஆராய்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை முழுமையாக ஆய்வு செய்தால் குமரிக்கண்டம் குறித்தும், தமிழரின் வரலாறு குறித்தும் பல பிரம்மிப்பூட்டும் தகவல்கள் வெளியாகலாம்.


குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

தேவநேயப் பாவாணர் குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மேலும் சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் பாண்டியப் பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விளக்கமாக குமரிக்கண்டதை ஆண்ட பாண்டிய அரசர்களின் பெயர்கள் மற்றும் தமிழ் அவையில் இருந்த புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புலவர் நக்கீரரால் கூறப்பட்டிருக்கும் இந்தக் தகவல்கள் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணக்கிடப்படுகிறது. இதில் தமிழ் மன்னர்களாகிய பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைச்சங்கம்

குமரிக்கண்டத்தின் தலைநகராக விளங்கிய தென் மதுரையில் கி.மு. 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தலைச்சங்கம் எனப்படும் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் தமிழை ஆராய்ந்தனர் என்றும் தெரிகிறது. சிவன், முருகன் ஆகிய கடவுள்களின் தலைமையில் முதல் தமிழ்ச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் குபேரன் முதல் தமிழ்ச்சங்கத்தில் இருந்தார் என்றும் தெரிகிறது. தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. கி.மு. 2387 ஏற்பட்ட முதல் கடற்கோளால் பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முழுவதும் அழிவுற்றன.

இடைச்சங்கம்

கபாடபுரம் என்ற தலைநகரம் இருந்த இடத்தில் இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்சங்கம் கி.மு. 2387 முதல் கி.மு. 306 ஆண்டுகள் வரையில் சுமார் 2000 ஆண்டுகள் செயல்பட்டதாகத் தெரிகிறது. கபாடபுரதில் 59 தமிழ் மொழிப் புலவர்கள் அங்கிருந்தபடி தமிழ் மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது.

கடைச்சங்கம்

மூன்றாவது தமிழ் சங்கமான கடைச்சங்கம் என்பது கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. கடைச் சங்கம் உத்தர மதுரையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொன்மையான தமிழ் நூல்களின் வாயிலாக மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் தெரியவருகிறது. ஆயினும் நூலின் வாயிலாக கிடைக்கப்பெற்ற இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்த ஒரு தடயமும் இது வரை கிடைக்கவில்லை. அதே சமயத்தில் இந்தக் குறிப்புகளை அறிவியல் முறைப்படி மறுக்கவும் இயலவில்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருந்தால் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் முன்பு நோக்கி செல்லும்.

புலவர் நக்கீரரின் உரையில் கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் நிலப்பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. குமரிக் கண்டத்தின் நிலப்பரப்பு பற்றி முதன் முதலில் சிலப்பதிகாரத்தில்தான் குறிப்புக்கள் காணப்படுகின்றன. வடக்கில் பஃறுளி ஆறிலிருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் குமரிக் கண்டம் நீண்டிருந்ததாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரிக்கண்டம் பற்றிய கடல் ஆராய்ச்சி

குமரிக்கண்டம்


ஆராய்ச்சியாளர் இந்தியப் பெருங்கடலில் 1960 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆயினும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் குமரிக்கண்டம் இருந்தது பற்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறவில்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பனி யுகத்தின் போது இந்தியப் பெருங்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் வெளியே இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் விஞ்ஞானத்திலும் அறிவியலிலும் சிறந்து விளங்கிய முதல் மனித இனமாம் தமிழ் இனம் ஏனோ இன்று ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

குமரிக்கண்டம் பற்றி ஆதாரங்கள் உள்ளனவா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படடனவா?

குமரிமுனைக்குத் தெற்கே (இந்தியப்பெருங்கடல் பகுதி பல்லாயிரம் ஆண்டின்முன் நிலப்பரபாக இருந்தது. இன்றைய இலங்கை உள்ளிட்ட பகுதியில் பஃறுளி ஆறு குமரிமலை இருந்தன. பஃறுளி ஆற்றடனுன் பன்மலை அடுக்கத்து குமரிக்கு கோடும் கொடுங்கடல் கொள்ள என்று சிலப்பதி காரம்சொல்லும்.

வரலாற்று ஆசிரியர்கள் லெமுரீயா கண்டம் என்றனர். உலகின் முதல் மாந்தன் தோற்றம் இங்குதான் என்றார்கள்.

.

தொல்லியல் ஆய்வு இலக்கிய இலக்கணச் சான்றுகள்

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாடலமறையோன் பாண்டிய மன்னனை வாழ்த்திப்பாடிய வரிகள்

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளிஆற்றுடன் பன்மலை அடுக்கத்து

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசை கங்கையொடு இமயமும் கொண்டு

தென்திசை யாண்ட தென்னவன் வாழி

 

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டம் குறித்து மறைக்கப்பட்ட வரலாற்று

பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் அழிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிலர் இந்த குமரிக்கண்டம் வெறும் கற்பனைதான் என்று கூறுகிறார்கள். இந்த பதிவில் குமரிக்கண்டம் குறித்த சில ரகசியங்களை பார்க்கலாம்.

பூமி எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேற்பரப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது, நமக்கு நன்கு தெரிந்த நாடுகள் கூட முற்றிலும் வேறுபட்ட இடங்களில் இருந்தன. இன்று நமக்குத் தெரிந்த நாடுகளும் கண்டங்களும் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அனைவரும் பாங்கேயா என்ற நிலப்பரப்பில் ஒன்றாக குழுவாக இருந்தனர்.

பேரழிவுகள் பூமியின் இந்த மாற்றத்திற்கான காரணம் டெக்டோனிக் தகடுகள் மற்றும் கான்டினென்டல் சறுக்கல்களின் இயக்கங்கள், அவை மலைகள், நீரில் மூழ்கிய நிலங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள் மற்றும் சுனாமி போன்ற பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தின

குமரிக்கண்டம் நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக்கண்டம் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால நாகரிகம் கடந்த காலத்தில் இருந்தது என்று நம்பப்படுகிறது. குமாரி கண்டம் முதன்முதலில் 15 ஆம் நூற்றாண்டின் ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டது. கடந்த பனி யுகம் முடிந்த பின்னர் கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

லெமூரியா கண்டம் 

19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய புவியியலாளர் பிலிப் லுட்லி ஸ்க்லேட்டர் லெமூரியா என்ற வார்த்தையை கொண்டு வந்தார், மடகாஸ்கர் லெமர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்ததை விளக்குகிறது. தமிழ் தேசியவாதிகள் நம்பியதைப் போலவே ஆப்பிரிக்காவையும் ஆசியாவை இணைக்கும் ஒரு நிலப்பரப்பின் கோட்பாட்டை அவர் கொண்டு வந்தார். மேலும் அதனுடன் சேர்த்து, தியோசோபிகல் நிறுவனர் மேடம் பிளேவட்ஸ்கி நீரில் மூழ்கிய நிலத்தில் வசிப்பவர்களை லெமூரியர்கள் என்று அழைத்தார்.

குமரிக்கண்ட ஆய்வும் தற்போதைய நிலை

குமரிக்கண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது 

மேலும் குமரிக்கண்டம் குறித்து 15 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் ஒருங்கிணைத்த கடல்சார் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு, நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு அவர்கள் நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளராக (Amicus curiae) இப்போது உள்ளார்.

இதனை தொடர்ந்து குமரிக்கண்டம் பற்றிய ஆய்வினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், கன்னியாகுமாரி,  ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உதவியோடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தியா, மாலதீவு, மடகாஸ்கர், மொரிசியஸ், ரீயூனியன், போன்ற பல நாடுகளில் உள்ள தமிழரின் குமரிக்கண்டத்தின் தரவுகளை ஆய்வாளர் ஒரிசா பாலு தலைமையிலான குழு ஆராய்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்க உள்ளனர்.

இவ்வாய்விற்கான அடிப்பதை ஆய்வுகளுக்கான செலவுகளை தென்புலத்தார் குழு பொறுப்பேர்த்துள்ளது.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments