திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரம் - 004
குறள் : 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
குறள் விளக்கம்:
அறம் மறுமைக்கான முத்தியும் தரும்; இம்மைக்கான செல்வமும் தரும். அதனால் அறத்தைக் காட்டிலும் மேலான செல்வம் மக்களுக்கு வேறு யாது உள்ளது?
குறள் : 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
குறள் விளக்கம்:
குறள் : 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.
குறள் விளக்கம்:
குறள் : 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
குறள் விளக்கம்:
ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை.
குறள் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
குறள் விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
குறள் : 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள் விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
குறள் : 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
குறள் விளக்கம்:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
குறள் : 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.-
குறள் விளக்கம்:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
குறள் : 39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
குறள் விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
குறள் : 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
குறள் விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
பால்: அறத்துப்பால்.
இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: அறன் வலியுறுத்தல்.
பொருள் விளக்கம்
மணக்குடவர் உரை
பரிமேலழகர் உரை
மு. வரதராசன் உரை
கலைஞர் உரை
சாலமன் பாப்பையா உரை
0 Comments