ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும்,
என் கருவை வயிற்றில் சுமக்க, ,தாய்மை என்ற அழகான பட்டத்தை பெறவும் காத்து கொண்டு
இருந்தேன்
வருடங்களும் ஓடியது
மாதங்களும் கடந்தது
தாய்மை என்ற கனவு குறைய
மலடி என்ற பட்டம் செவியில் ஒலிக்க ஆரம்பித்தது
மனதளவில் பல கசப்பான பேச்சுகளை கடந்து,
ஒரு நாள் தாய்மை என்ற பட்டமும் பெற்றேன்
ஒரு அழகிய பெண் குழந்தையை தத்தெடுத்து!
அந்த பிஞ்சு விரல்கள் என்னை தீண்டும் போது உணர்ந்தேன்
தாய்மை என்பது சுமப்பது மட்டும் அல்ல தத் தெடுப்பதிலும் உள்ளது.
நன்றி - M.sivaranjani mathipal
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments