ஏனோ ஒரு கலக்கம்!
ஏனோ ஒரு கவலை!
ஏனோ ஒரு கடினம்!
ஏனோ ஒரு காரணம்!
ஏனென்று தெரியவில்லை! ஆனால்,
பங்குனி வெயிலிலும் பளிச்சென்று,
பகலவனுக்கும் இணையாய் துணைநின்று,
கதிரொளி வீசினாலும் தன்னொளி தேயாமல்,
பறந்த வானில் என்னீர்ப்பைப் பெற்ற
பகல் நிலவைப் பார்கும் போது,
மனதுக்குள் ஏதோ ஒரு ஆறுதலும் உற்சாகமும்...
அண்டமே தன்னழகைக் காட்டி முன்நின்றாலும்,
தன் தனித்தன்மை மாறாமல் மின்னும்
பகல்நிலவே!!!
என்னழகு இருளில் மட்டும் அல்ல
பகலிலும் தான் என்று நிருபித்துவிட்டாய்...
வாழ்வில் எங்கு தொலைந்தாலும்
பிரகாசமாய் ஒளிவீச மறவாதே என்று
கற்றுக்கொடுத்துவிட்டாய்...
நன்றி - அ. விவிலியா அமல வர்ஷினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
1 Comments
அருமை !!
ReplyDelete