தமிழ் கவிதை காதல் மனம் Tamil Kavithai Kathal Manam - செ.ம.சுபாஷினி

தமிழ் கவிதை காதல் மனம் Tamil Kavithai Kathal Manam - செ.ம.சுபாஷினி


கண்ணுக்குள்

பெண்னை வைத்து

கருத்துக்குள்

தன்னை வைத்து

தங்க உடல்தனை

தகரமாய் தேய்க்கும்

தந்தை அறிவாரா- உன்

காதல் மனதை.


கற்கும் கல்வியே

கை கொடுக்குமென

பாவிமகள் படித்திட

பட்டினி தானிருந்து பல

அடுப்பங்கரையில் வெந்த

தாய் அறிவாரா- உன்

காதல் மனதை. 


மண்ணுங்குள்

மனித நேயம்

புண்ணோடு புரண்டு படுக்க

செல் லிலே செல்லும்

தனி மனித நேயம்

யார்அறிவார- உன்

காதல் மனதை. 


காமக் களியாட்டங்கள்

கடை விரித்து

கட்டுக்கதை பேச

காத்திருக்க -அங்கே

யாரறிவார் - உன்

காதல் மனதை.


அழிந்து விட்டதடி

அன்னப்பறவை 

கூட்டமெல்லாம்

தெளிந்து முடிவெடுக்க

தெரியாது உன் குணத்தால்


ஊரும் அறியாமல்

உலகம் அறியாமல்

காதல் மனதை காத்திடு

கணவன் அறிய

காலம் உன் காலடியில்.


நன்றி - செ.ம.சுபாஷினி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments