பெற்றதில் பெருமை பெற்ற பேரன்பே ,
தியாகத்தின் திறவுகோல் நீயே
தூக்கம் போக்கி தூய்மை போற்றி என்னை வளர்த்தீரே அம்மா
இரத்தத்தில் யுத்தம் செய்து
வலியால் உலகை வென்று என்னை இந்த உலகிற்கு தந்தீரே அம்மா
தெரு ஒர சாலையிலே கொட்டும் மழையில் என்னை ஒரு சொட்டும் நனையாமல் காத்தீரே
உம் பெருமையோ எனக்கு பெருமிதம்,
பாலூட்டி பசி போக்கி, சோரூட்டி சுகம் தந்தீரே அம்மா .
இரவில் அழும் போதெல்லாம் அரவணைத்து உம் தூக்கம் போக்கி என் ஏக்கம் தீர்த்தீரே,
தவறு செய்யும் போது தடுத்து வாழ்வில் உயர வார்த்தை கொடுத்தீரே .என் கடன் தீர்க்க அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் பிறக்க நான் உனக்கு தாலாட்ட வாய்ப்பு வேண்டும் அம்மா,
தாய்மை போற்றி வாய்மை வெல்வோம்.
நன்றி - Velmurugan
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments