"அடுத்தப் பண்டிகைக்கு
அப்பா வீட்டில் இருப்பேன்"
அன்பு மகளுக்கு ஆதரவராய்
அன்று கொடுத்த சத்யவாக்கு
தினக்கூலியாய் உழைத்து
தினம்தினம் செத்துப்பிழைத்து
திரட்டிய நாணயங்களில்
தின்பண்டமும், பொம்மையும்
தீபாவளிக்கு வாங்கிக்கொண்டு
திரும்புகிறேன் ஊருக்கு
பார்த்த வேளையின்
படிஅளந்து கொடுப்பதற்கு
பரந்த மனசுடைய முதலாளிக்கு
பகலும், இரவும் போதவில்லை
தாமதித்து கொடுத்தகாசில்
தம்புடியும் கூட, குறைய இல்லை
தந்த தாராள பணத்தில்
தங்கமகளுக்கு எல்லாம்வாங்கி கொண்டு
தட்டித் தடுமாறி வந்து
தண்டவாளமும் தாண்டிவிட்டேன்
காலம் என்னை கைவிடவில்லை
கடைசி ரயிலும் காத்திருக்கிறது
கடைசிப் பெட்டி ஏறி
கனகச்சிதமாய் அமர்ந்துகொண்டேன்
மஞ்சள் விளக்கும் மாறப்போகிறது
மங்கிய எங்கள் வாழ்வு
மாறும் நாள்தான் என்றோ?
நன்றி - ஆடலரசு என்கிற தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments