நான் பார்த்து அவள் பார்த்து,
மகிழ்ந்தது நான்.
மலர்வது பூ,
சிரிப்பது நான்,
நகர்வது நேரம்.
அவளிடம் காதல்,
யாரிடமோ அவளது காதல்.
பதறி போன இதயம்,
அவள் அருகில் செல்ல.
படர்ந்து போன கூந்தல்,
அதுவும் அழகிய கூந்தலே.
அன்று 17 வயது நான்,
முடிந்தது இறுதி தேர்விலே.
தொற்று போனேன் என் காதலிலே,
தொற்று போனது என் காலுமே.
பயந்தவன் நானே,
அழுதவனும் நானே,
அவளிடம் சொல்லாததை நினைத்து.
இன்று சொல்ல முன் செல்வது,
20 வயது என் கால்.
பூ கடை அருகில் என் அழகிய பூ,
அவளே பூவே.
பயம் நீங்கி போனேன்,
அவளிடம் சொல்ல.
அருகில் பார்த்த என் கண் அவளை,
3 வயது குழந்தையுடன்,
அவளுடன் குழந்தை,
அவள் குழந்தை.
இன்று நானும் குழந்தை.
அன்று பேச பயந்த,
17 வயது காதல் குந்தையே,
நானே…..
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments