கண்ணை கட்டிக்கொண்டு
தூங்கி பார்த்தேன்,
கருமைஇருள் நிறைந்த எல்லா
உள்நிழலிலும் அவள்
உருவம் மட்டும் தெரிகிறதே!
காதை கட்டிக்கொண்டு
தூங்கி பார்த்தேன்,
காற்று இல்லா உட்செவியிலும்
அவள் இதயத்துடிப்பின்
சத்தம் மட்டும் கேட்கிறதே!
காய்ச்சல் மூக்கடைப்பால்
படுத்து கிடந்தேன்,
மனம் வாடிய அந்த வேளையிலும்
உள்நாசி அவள் சூடிஇருந்த மலரின்
மணம் மட்டும் உணர்கிறதே!
கையை கட்டிக்கொண்டு
சாய்ந்து கிடந்தேன்,
கட்டுக்குள் இருக்கும் கைவிரலும்
அன்று தெரியாமல் எதிர்ச்சையாக
அவள் விரல் தீண்டிய பொழுதின்
மறுஒளிபரப்புக்கு ஏங்கி வாடுகிறதே!
எதுவும் பேசமால் மௌன விரதத்தில்
இருக்க நினைத்தேன்,
ஊமையாய் இருந்த உதடுகளும்
அவள் உதடுகள் உதிர்த்ததை
சட்டென்று பேசி தோற்கிறதே!
ஐம்புலன்கள் செயல்படாத நிலையிலும்
உயிருள்ள ஐம்பொன் சிலை ஒன்று
உயிரை உள்ளிருந்து உலகை
எல்லாம் கடந்த இறைநிலை
நோக்கி கூட்டி செல்கிறதே!!
நன்றி - நா. பாலா சரவணாதேவி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments