அக்கம் பக்கம் அறியாரே கனன்ற கருப்பையின் புகைச்சல் நெடி!
குற்றம் சொல்லும் சுற்றம் தெரிவாரோ
சூலகங்களின் சூட்சமங்கள்!
மகரந்தம் மட்டும் தான் மாதரின் சின்னங்களா!
மசக்கையில்லா மலடி கூட பெண்மை பேசும் பட்டங்களா!
சிவத்தின் சூலத்திலும் சூல் கொள்ளவில்லை!
தவத்தின் பலத்திலும் கரு கொள்ளவில்லை!
சிலுவையின் பாரம் மட்டும் சுமந்து செல்கிறாள்!
தாகத்தின் தாபமும் உண்டு!
மோகத்தின் போகமும் உண்டு!
என்றாலும் உச்சம் பெற்றது சாபம் தானோ!
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் போட்டி போட்டு தாய்மை படைக்குதே!
தோல்வி என்றால் காலி பாத்திரமென்று போலி உலகம் கேலி பேசுதே!
கடவுளின் கணக்கில் செலவாகாத வரமாய் போனாளோ!
மூடிய கருவறைக்கு காவலிருக்க போறாளோ!
அடித்தளம் சரியில்லா அடுக்குமாடியாய் பதறுகிறாள்!
அடுக்களைக்குள் ஒளிந்தே வாழ்க்கை தொலைக்கிறாள்!
போதுமடி பெண்ணே!சுருண்டு துவண்டது!
உனக்கு வேண்டாமிந்த சம்பிரதாய சமுதாயம்!
உன் கால்களால் பயணிக்க காலணிகள் தேவையில்லையே!
போகாதே பின்னே!!!வேறு பாதையுண்டு உன் முன்னே!
நன்றி - Sreeneela
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
1 Comments
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDelete