கவிஞனாயாவது என் கனவல்ல...
என் கண்கள் உன்னை
காண்பதற்கு முன்...
கிறுக்கலாய் நினைத்தேன்
உன் புன்முறுவலை வர்ணிக்கும் போது......
முட்டாள் தனமாய் தோன்றியது
உன் குறும்புதனத்தை ரசித்தபோது..
சிறகடித்து பறப்பதாய் உணர்ந்தேன்....
நீ சில்லென்று பேசி எனை நனைக்கையில்...
சில நேரம் என்னை மறந்தேன் உன் விழி
உலா வருகையில் என் இருவிழியால்
அதை நிழற்படம் எடுத்த போது...
களவும் கற்று மறந்துவிட்டேன்
உன் கன்னக்குழி சிரிப்பில் என்னை புதைத்தபோது....
தெரியாத எழுத்தும் அறிமுகம் ஆனது
உன் நிசப்தத்தை நினைக்கும்போது...
ஹைக்கூ கவிதையாய் நினைத்து தான் ஆரம்பித்தேன் இந்த உறவை..
இன்ற முற்றுப்புள்ளி வைக்க கூட இடமில்லை... ஏன்.??? ஆம்...!!!
முடிவில்லாமலே போகட்டுமே இந்த உறவு....
அடுத்த வரிக்கான வார்த்தையை தேடி நான்..!!!
நன்றி - இரா. சங்கீதா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments