நன்செய் புன்செய் பச்சை வளங்களில்
மனித உயிர்க்காக்கும் இயற்கை வளங்கள் !!!
மலை அன்னையின் மார்பில் வழிந்து
பால் போல் விளங்கும் நீர் வளங்கள் !!!
வித்திட்டு உயர்திணை அஃறிணை காக்கும் மண் வளங்கள்!!!
கரும்பச்சையும் இளம் பச்சையும்
ஆடை அணிந்து காட்டை காக்கும் மர வளங்கள் !!!
ஓரறிவு முதல் ஆறறிவு வரையும்
மடியில் தவழும் காட்டு அன்னை மனமே!!!
தித்திக்கும் தெள்ளமுதாய் இருந்து
பசிப்பிணி போக்கும் பழ வளங்கள் கொண்டு ....
பிணிபோக்கும் மருந்தினையும் தன்னூல் கொண்டு. ...
தொன்மை தூய்மை தாய்மை வளமை
இளமை இனிமை கொண்ட என் இயற்கை அன்னைக்கு !!!
காட்டு குயில்களோடும் அழகிய பறவைகளோடும்
நாமும் பறைசாற்றுவோம்! !வாழ்வாங்கு வாழ் என்று !!!.
நன்றி - Karthika.P
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments