அன்று உன் காதலை நீ கூற
நானோ மறுத்துவிட்டேன்..!
நான் மறுத்த மறுதினம் முதல்
நீயும் மறந்துவிட்டாய்...!
அந்த நொடி முதல்
உன்னில் என்னை
நானும் இழந்துவிட்டேன்...!
அடுத்து எப்பொழுது
கேட்பாய் என்றே காத்திருக்க...
நீயோ அதை விடுத்து
அதற்கும் உனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
என்றே ஒப்பந்தம்
செய்துவிட்டாய்...!
எத்துணை தூரம் நானே
காட்டி கொண்டாலும்...
அத்துணை பாரம் மனதில்
சுமந்து வந்தாலும்...!
தெரிந்தும் புரியவில்லையே
என் மடையா...!
ஒருமுறை வாய்ப்பை
இழந்துவிட்டேன்...!
மறுமுறை பரிசீலனை
செய்ய வேண்டி
விண்ணப்பிக்கிறேன்...!
நன்றி - Reathanya C N
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 تعليقات