தமிழ் ஓரெழுத்து சொற்கள் - Tamil Monosyllabic Words

Tamil Monosyllabic Words

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஓரெழுத்து சொல் என்றால் என்ன?

'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாக நின்று பிற பொருளைச் சுட்டும் சொற்கள். எடுத்துக்காட்டாகத் 'தீ' என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் 'நெருப்பு' என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே 'தீ' என்பது ஓரெழுத்தொருமொழி. ஓர் எழுத்து தன்னைக் குறிக்கும்போது எழுத்தாகிறது; அவ்வெழுத்தே பிற பொருளைச் சுட்டும் போது சொல்லாகிறது.

அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ

உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை

எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை

ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை)

ஔ - பூமி, ஆனந்தம்

க - வியங்கோள் விகுதி

கா - காத்தல், சோலை

கி - இரைச்சல் ஒலி

கு - குவளயம்

கூ - பூமி, கூவுதல், உலகம்

கை - உறுப்பு, கரம்

கோ - அரசன், தந்தை, இறைவன்

கௌ - கொள்ளு, தீங்கு

சா - இறத்தல், சாக்காடு

சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்

சு - விரட்டடுதல், சுகம், மங்கலம்

சே - காலை

சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ - மதில், அரண்

ஞா - பொருத்து, கட்டு

தா - கொடு, கேட்பது

தீ - நெருப்பு , தீமை

து - உண்

தூ - வெண்மை, தூய்மை

தே - கடவுள்

தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா - நான், நாக்கு

நி - இன்பம், அதிகம், விருப்பம்

நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ - யானை, ஆபரணம், அணி

நே - அன்பு, அருள், நேயம்

நை - வருந்து

நோ - துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்

நௌ - மரக்கலம்

ப - நூறு

பா - பாட்டு, கவிதை

பூ - மலர்

பே - நுரை, அழகு, அச்சம்

பை - கைப்பை

போ - செல், ஏவல்

ம - சந்திரன், எமன்

மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

மீ - மேலே , உயர்ச்சி, உச்சி

மூ - மூப்பு, முதுமை

மே - மேல்

மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ - மோதல், முகரதல்

ய - தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்

யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை

வ - நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்

வா - வருக, ஏவல்

வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ - மலர் , அழிவு

வே - வேம்பு, உளவு

வை - வைக்கவும், கூர்மை

வௌ - வவ்வுதல்

நோ - வருந்து

ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்.


மேலும் தமிழ் ஓரெழுத்து சொற்கள்

அ - அழகு

ஆ - துன்பம்

ஈ - அழிவு

உ - நான்முகன்

ஊ - திங்கள்

எ - குறி

ஏ - இறுமாப்பு 

ஐ - அரசன் ,கடுகு ,கோழை ,தலைவன் ,ஐந்து

ஓ - ஐயம் ,வியப்பு

ஒள - பாம்பு ,நிலம்

க - உடல் ,காற்று ,திரவியம்

கா - காவடி ,சோலை ,கலைமகள்

கீ - தடை ,பாவம் ,பூமி

கு - குற்றம் ,நிறம் ,நீக்கம்

கூ - பிசாசு ,அழுக்கு

கை - இடம் ,ஒப்பனை

கோ - சூரியன் ,திசை ,நீர் ,கண்

கெள - கொள்ளு ,தீங்கு

சா - சோர்தல்

சீ - அடக்கம் ,அலட்சியம்

சு - நன்மை ,சுகம்

சூ - வானவகை

சே - சிவப்பு ,மரம் ,உயர்வு

சோ - நகர்

ஞா - சுட்டு ,பொருத்து

த - குபேரன்

தா - அழிவு ,பகை

தீ - அறிவு ,இனிமை ,ஞானம்

து - அசைத்தல் ,அனுபவம்

தூ - வலிமை ,வகை

தே - கொள்கை

தை - அலங்காரம் ,மகரராசி

நா - அயலாள் ,மணி

நீ - நிறைவு ,உறுதி

நு - தியானம் ,நேசம் ,புகழ்

நூ - எள் ,யானை ,ஆபரணம்

நெ - நெகிழ்தல்

நே - அன்பு ,அருள் ,நேயம்

நொ - வருத்தம்

நோ - சிதைவு ,துக்கம்

ப - காற்று ,சாபம்

பா - பாடல் ,பஞ்சு ,நூல்

பி - அழகு

பூ - பொலிவு ,இலை 

பே - அச்சம்

பை - வில் ,உடல் 

ம - மந்திரம் 

வி - பறவை 

வே - வேவு 

வை - புல்



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات