அன்பு மகனே
ஆயிரம் முறை உன்னை அழைத்தாலும் உன் செவிகளில் கேட்காத தொலைவில் நீ
(என் மகனே)
இரு கைகளால் தொடும் தொலைவில் நீ இல்லை
(என் மகனே)
ஈன்றெடுத்த அந்த நொடி என் நினைவில் நீங்காமல்
(என் மகனே)
உன்னை மட்டும் இவுலகில் யோசித்த காலம் இந்த நொடி வரை
(என் மகனே)
ஊன்றாக நினைத்தேன் உன் உறவை என் இறுதிவரை
(என் மகனே)
எனக்கான உலகில்
உனக்காக வாழ்ந்தேன்
(என் மகனே)
ஏங்கி நீ நிற்கும் நிலை என்று உனக்கானது அல்ல
( என் மகனே)
ஐயாயிரம் வருடம் ஆனாலும் நீ,என் மகன், நன் உன் அம்மா, இது காலம் அழியாத உண்மை
(என் மகனே)
ஓராயிரம் நினைவுகள் உன் மனதில் இருந்தாலும், உன் அம்மாவிற்கு ஒரு நொடி கொடு,
( என் மகனே)
ஓங்கி நீ நிற்கும் நிலை கன தவமாய் தவம் இருந்தேன்,ஆனால் இன்று ஏனோ நான் காணாத இடத்தில் வைத்து விட்டாய்
(என் மகனே)
ஒளவையார் கூறியது போல், மதியாதை தலை வாசல் மிதியாதை என்று நீ என்னிடம் வந்தாலும் நன் உன்னிடம் வருவேனா
( என் மகனே)
மகனே ஒன்று மட்டும் கூறுகிறேன்,அம்மா என்றால் ஆயிரம் உறவுகள் இப்பூமியில் இருந்தாலும்,நீ பதித்த முதல் பாதம் என் கருவறையில் இருந்து தான்
( என் மகனே)
ஏனடா என்னை முகம் பார்க்காத தொலைவில் விட்டு சென்று விட்டாய் முதியோர் இல்லத்தில்
(என் மகனே)
இப்படிக்கு
நம் இருவருக்கான
உறவு (அம்மா)
நன்றி - இ.உமா மகேஸ்வரி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments