தமிழ் கவிதை என்னை வாழவிடு (பூமி) Tamil Kavithai Ennai Vaala Vidu - கனிமொழி.ம

Tamil Kavithai Ennai Vaala Vidu

சுகமாய்ப் பிறந்தேன் சூரியத்தாயின் மடியிலே 

சுகங்கள் யாவும் பெற்றேன் விழுதாக இருந்தேன் மனிதா 

உன்னைக்காக்க  அதனால் விண்ணைத் தாண்டி 

வந்தாய் நீ  அறிவியல் சக்தியில் ஆக்கம் 

கொண்டாய் அன்றே அறியேன்

என் ஆயுக்கலாம் குறைவென்று

சீட்டுக்குருவிகளின் வரவு குறைந்தது 

நீ எழுப்பிய செல்போன் டவர்களினால்

ஓயாமல் அனுப்பினாய் கார்பன் டை ஆக்சைடை

எதை வைத்து ஒட்டுப் போடுவேன் என் ஓசோன் படலத்திற்கு

பச்சை மரங்களை அழித்தாய் 

பசுமை இல்ல விளைவிற்கு என்னை 

ஆளாக்கினாய் மனிதனின் வாழ்விற்கு காரணம் 

மரம் தான் அதை ஏன் மனிதன் மறந்தான் 

உன்னை ஈன்ற பூமித்தாயின் கருவறையை 

காயப்படுத்தி உலக வெப்பமயமாதல் 

என்ற சாபத்திற்கு ஆளாகாதே தரையைத் 

தூய்மைப்படுத்தி தரமான மரங்களை வளர்த்துப்பார்

'தானே' புயல் வந்தாலும் தளராமல் நிற்பாய் 

நீ மரங்களை வளர்ப்போம் மனித நேயத்தைக் காப்போம்...

நன்றி கனிமொழி.ம

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments