ஓராயிரம் புன்னகையுடன் வாழ்ந்த வாழ்வை கடந்து
பல்கலை வாழ்வுக்குள் நுழைந்தேன்
பல்கலையும் பயின்றேன் தான் அங்கு
வலியுடன் சிரிப்பதற்கும், சுயநல உலகை அனுசரிப்பதற்கும்
கூட்டத்தின் நடுவே தனிமையை ரசிப்பதற்கும்
வயிற்றை நிரப்ப காசு இல்லாமல் தண்ணியை குடிப்பதற்கும்
வீட்டிற்கு சந்தோசமாய் இருப்பது போல் நடிப்பதற்கும்,
விடுமுறை நாளை எண்ணி எண்ணி நாட்களை கடப்பதற்கும்!......
வாழ்க்கையை கற்று தந்த இந்த கல்லூரி வாழ்வு முடியும்
தருவாயில் விழியோரம் கண்ணீருடன் விடைபெறுகிறேன்.
நன்றி - Nithusha Karunanithy
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments