ஆடை தயாரிப்புக் கலையில் ஒரு தையல் எனப்படுவது நூல் துணியில் ஊசி மூலம் இடப்படும் முடிச்சு அல்லது வளையம் இடுவதாகும். இயந்திரத் தையல் ஆயினும் கைத் தையல் ஆயினும் கட்டு அல்லது முடிச்சி என்பது தையலின் அடிப்படை ஆகும். பல்வேறுபட்ட தையல் முறைகள் காணப்படுகின்றன அவை ஒவ்வொறு வேறுபட்ட நோக்கங்களுக்ககப் பயன்படுத்தப்படுகின்றன.
தையல் கைத்தொழிலில் பல்வேறு தையல் முறைகளும் உள்ளன. நவீன தையல்காரர்கள் கடைப்பிடிக்கக்கூடிய பல தனித்துவமான ஒன்று அல்லது இரண்டு தையல் முறைகள் மட்டுமே பயிற்சி பெற்றிருப்பார்கள்.
தையல் வகைகள் Types of Sewing
- காக்காத் தையல்
- நிரப்புத் தையல்
- மீன் முள்ளுத் தையல்
- சங்கிலித் தையல்
- கம்பலித் தையல்
- நரம்புத் தையல்
- துன்னாத் தையல்
- சோம் தையல்
- விஸ்பம் தையல்
- சிரிய நூலோடல்
- பெரிய நூலோடல்
தையல் ஊசி மூலம் இடப்படக் கூடிய இந்த தையல் வகைகள் ஊசிக் கண் அமைப்பில் மாறுபடும் தையல்களை இரு வகைகலாக பிரிக்கலாம்
- அடிப்படைத்தையல்
- அலங்காரத்தையல்
அடிப்படைத்தையல்: இது சோம் தையல்,விசுபம் தையல், சிறுநூலோடி, பெருநூலோடி, துன்னாத்தையல் முதலியவற்றை அடக்கும்.
அலங்காரத்தையல்: இது சங்கிலித்தையல், நரம்புத்தையல், நிரப்புத் தையல், காக்காத் தையல், மீன் முள்ளுத் தையல், கம்பளித்தையல் ஆகியவற்றை அடக்கும்.
0 Comments