ஏட்டிலே எழுத ஏழு நிற பேனாவோ
ஏழ்மையிலே வாடி நின்றாலோ
ஏழு பவுன் தங்கம் இல்லையென்றாலோ
வாழ்க்கையிலே ஏங்கி தவிப்பதில்லை ஏழையின் மனம்
ஏழு வகை செல்வங்களை விட முத்துக்கள்
நவரத்தினங்களை விட அழகிய பிள்ளைச் செல்வங்களை
பெற்ற ஏழையே எட்டுக் கோடி பணத்தைக்
கொண்டவரை விட பணக்காரன்
கைபிடியளவு கஞ்சியை பசிக்கின்ற
வயிற்றுக்கு உண்ணுகின்ற ஒரு வேளையிலும்
கூட அன்னம் தேடி வருவோருக்கு
அள்ளி கொடுப்பதே ஏழையின் மனம்
ஏர் பிடித்தாலோ ஏணியில் ஏறி
மரம் அறுத்தாலோ ஏலக்காய் விற்றாலோ
ஏழையிலிருந்து வழியும் வியர்வை த்துளி
விருட்சமாய் வளரச் செய்யும் ஞாலத்திலே
தங்கம் வைரம் வைடூரியமோ
பட்டம் பதவி பணமோ பத்து மாடி வீடோ
இல்லையென்பதால் நீ ஏழை இல்லை
தங்கமான குணமும் வைரமாகிய
பண்பும் வைடூரியம் என்ற பொறுமையும்
பட்டம் பதவி போன்ற அன்பையும்
அறியாத அரியே சிந்தையிலே ஏழை
நகைகளால் தன்னை அலங்கரித்து
அடுக்கு மாடி வீட்டில் அமர்ந்து சொகுசு வாகனத்தை கொண்டு
ஊரைச் சுற்றும் பணக்காரர் பணத்தால்
உன்னை தாழ்த்தினாலும் தரம் குறையாமல்
தங்கமாய் தரணியிலே மின்னுவதே ஏழையின் மனம்
பணம் கைக்கு கை மாறும் குணமே
பிறர் கைகளிலே உன்னை தாங்கச் செய்யும்
பணத்தைக் கொண்டு பம்பரம் வாங்கலாம்
மறைந்தாலும் குணம் கொண்டு குவலயத்தில் வாழலாம்
கை மாறும் காசைக் கொண்டு
மனிதனை தரம் பிரிக்காதே
சுழலுகின்ற பூமியிலே மாற்றம் என்பதே
மாறாதது இன்றைய ஏழை நாளைய செல்வந்தர்
வாழ்க்கையிலே காசு இல்லாதவர் ஏழை இல்லை
மனதிலே கருணை இல்லாதவரே ஏழை
நன்றி - Tharshika Balendran
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments