உரு தந்தது நீங்கள் உயிர் தந்தது நீங்கள்
கருவாகி உருவானேன் உங்களால்!
அரும்புப் பருவத்தில் நான் உதிர்த்த அர்த்தமில்லாத
வார்த்தைகளையும் கேட்டு அசந்தவர்கள் நீங்கள்
என் சிறு அசைவையும் கண்டு சிலிர்த்தவர்கள் நீங்கள்;
தங்களின் இரவுகள் கூட பகலானது
எனது இன்னுறக்கத்துக்காய் நீங்கள் கண்விழித்து;
காலம்காலமாய் ‘தியாகம்’ எனும் சொல்லுக்கு
இலக்கணமாகிவிட்ட தங்களை
ஒருநாளேனும் தலைநிமிரச்செய்து
‘நன்றி’ எனும் சொல்லுக்கு நான்
இலக்கணமாகிவிடும் நாள்பார்த்து
நகர்கிறது என் நாட்கள்
உங்கள் அன்புக்கு ஈடான ஒரு நலமளிக்கும் மருந்தை
நான் எங்கும் கண்டதில்லை
உங்களுக்கு ஈடாக எனக்கு அறிவு புகட்டும் ஒரு ஆசானை
இனி நான் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை.
இன்னுமோர் பிறவி வேண்டும்
மீண்டும் நான் உங்கன் மகளாக அல்ல்
அப்போதாவது நீங்கள் என் பிள்ளையாக…
நன்றி - Preethi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments