யார் வாழ்க்கை...
காவியம் ஆகும் என்று
யாருக்கும் தெரியாது ! கடைத்தெருவில்...
கண்டெடுப்பதல்ல காவியங்கள் !
யாரோ வாழ்ந்த வாழ்க்கை
காவியம் ஆகிறது !
கோவலன் வாழ்க்கையில்...
புகுந்து கெடுத்து பின்...
பிச்சை பாத்திரம் ஏந்தி
காவியமானாள் மணிமேகலை !
தனக்கு துரோகம் செய்த
கணவனுக்கு நீதி கேட்டு
மதுரையை எரித்து
காவியம் ஆனாள் கண்ணகி !
காதல் மனைவிக்கு
தாஜ்மஹால் கட்டி
காவியம் ஆனான் ஷாஜகான் !
கணையாழியை தொலைத்ததால்
வாழ்க்கையை தொலைத்து
காவியம் ஆனாள் சகுந்தலை !
பல பத்தினி தந்தைக்கு மகனான
ஏக பத்தினி விரதன்
ராமன் காவியம் ஆனான் !
கிராமத்து கருவாச்சி கூட
காவியம் ஆனாள் !
உன் வாழ்க்கை...
பிறர் நெஞ்சை தொடுமானால்
நீயும் காவியம் ஆவாய் !
நன்றி - Pushpalatha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments