தமிழ் கவிதை இயற்கையெனும் வரையிலான சித்திரம் - Tamil Kavithai Iyarkai

Tamil Kavithai Iyarkai

இயற்கை வரைய இயலாத சித்திரம்

மேலோகத்தை பிரிந்து பூலோகத்தை சேரும் 

மரகத மழைதுளியே மாணிக்க அமிழ்தமே!


சுவை அறிய நாவுமுண்டோ? 

உன்னை சுவைக்க உயிரும்முண்டோ? 

உலகை படைத்த உமயவளே! 

உயிரை காக்கும் தாய் இவளை!


மேகத்தை தழுவும் மலையழகே 

மரம் செடி கொடி யாவும் மண்ணுக்கு அழகே

மண்ணுக்குள் மறையும் மழைதுளியும் அழகு!


ஊர்வன பறப்பன யாவும் உலகிற்கு 

அழகே-காலை உதய கதிரவனும் 

காரிருள் உயிர் நிலவும் காலத்திற்கு அழகே!


இயற்கையை வியக்கம் இமை அழகின் அழகு! 

இன்னிசை பாடும் குயிலுடன் இடியின் தாளமும் அழகு!

பசுமை கொஞ்சும் பாரே பறவைகள் கொஞ்சும் தேரே  

படர்ந்து விரியும் மலரே பார்வையை கொள்ளையிடும் இயற்கையே!


கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி உந்தன் இயற்கை!

கவலையை கலவு செய்யும். கலை உந்தன் வேலையோ?

வண்ண வண்ண சித்திரமாய் வானவில்லாய் 

வளைந்தாய் வான் மழை தூறலிலே விண்ணையே பிரிந்தாய்...


அலைஅலையாய் சிறகடிந்து கரையை காண்கிறாய் 

மண்ணின்மீது வெட்கம் ஏனோ? 

உள்ளே சென்று மறைகிறாய்...


இயற்கையெனும் ஓவியம் வரைய இயலாத சித்திரம்

மானிடனே இனிக்கும் மனதிலே பதியுங்கள் 

இன்னல்கள் தருபவற்றை தவிருங்கள்...

நன்றி - Santhosh S

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments