காதலித்து பார்க்க ஆசை இல்ல காதலிக்க ஆசை எனக்கு - Tamil Kavithai I Want to Love

I Want to Love

கண்கள் கண்டதும் காதல் என்று

சுற்றி வர ஆசை இல்லை எனக்கு

காலம் கடந்தும் உயிர் மூச்சென வாழ்ந்திடும் 

காதல் காண ஆசை எனக்கு 

சசூட்சுமம் கொண்ட காதல் தேவையல்ல எனக்கு 

மோட்சம் வேண்டாத பாசம் தரும் 

உன்னதக்  காதல் வேண்டும் எனக்கு 


காதலித்து பார்க்க ஆசையல்ல எனக்கு

காதலிக்க ஆசை எனக்கு

தயங்கி தயங்கி கள்ளம் பூசி பெற்றோரை 

ஏமாற்றிடும் காதல் வேணாம் எனக்கு 


உறவுகள் கூடி உணர்வுகள் சேர்ந்து வாழ்த்துப் பாடி 

கை கோர்த்து தரும் காதல் வேணும் எனக்கு

அச்சமின்றி நெஞ்சில் உதைப்பதை கொட்டி 

தீர்க்க உரிமை காதல் வேண்டும் எனக்கு


போலியாக பேசி பாதியோடு வார்த்தை வீசி 

பிரியும் காதல் வேண்டாமே

உயிரென்று மொழிந்து உலகமே என்று வழிந்து விட்டு 

விடைபெறும் துரோகக்காதல் வேண்டாமே


அல்லும் பகலும் ஒருவக்கொருவர் 

நேசமும் பாசமும் அக்கரையும் வாரி வழங்கி 

வாழும்/வாழவைக்கும் அந்தக்காதல் வேண்டும் 

நிதர்சனத்தில் நிதானமாய் கையாளும் அந்தக்காதலை தேடுகிறேன் 


மறைந்தொளிந்து வேசமாய் விசமோடு 

பொய்மை பூசிகொண்ட காதல் வேண்டாமே 

வாழ வேண்டும் நீண்ட காலமே காதலுடனே 

எனக்கென்று பிறந்தவனோடு 


தனக்கென்றில்லாது தமக்கென்று வாழும் அவனோடு 

புத்தம் புது மலராய் தினம் தினம் நானும் 

மலரனும் அவன் தரும் காதல் நீருடன்

என்னவனே நான் உன்னவளே 


என்னவனே உனக்கென நானும் நமெக்கென நம் காதலுடன் 

ஆயுள் முடிந்தாலும் மறுமை தனிலும் சொர்க்கம் தொட வேண்டுமடா

 காத்திருக்கிறேன் உன் வரவை கேட்டு வல்லோனை துதித்து 

இதயத் துடிப்போடு துடிப்பாய் நீயடா 


உயிர் துடிப்பு எனக்கு நீ எனக்கு

தாமதமாகிற போது வலித்தாலும் சுலித்தாலும் காத்திருக்கிறேன் 

வந்து விழும் கேள்விகள் மனதை பிளவாக்கினாலும் 

உனக்காக இறைவன் அருளை எதிர்பார்த்து 

காத்திருக்க தான் வேண்டுமடா 


கனவாளனே நீ தான் என் கணவாளனே 

காலம் மாறிட வயதும் ஏறிட 

மனித நாவு விஷமமாய் சொல் வீச 

வலித்தாலும் பொறுத்திருக்கிறேன் பொறுமையோடு 

காதலிக்க வேண்டும் 


எனது அத்தனையைக் காதலையுமே உனக்காய் 

உருகி மருகி தரவேண்டுமடா

பொக்கிஷ போல பெட்டகத்தில் சேர்கிறாய் 

பலிப்போருக்கும் ஓர் நாளிதனில் நலவாக நானும்

 நனவாளனோடு வாழ்வேன் என்று 

காட்டிடட தான் வேண்டுகிறேன் 


கடமைக்கு வாழும் வாழ்க்கை வேண்டாம் 

பொறுமைக்கும் பொருத்தம் வேண்டுமே 

வாழ்கை வாழ தான் போராட அல்லவே 

நீங்கள் என்ன உதாசீனமாக்கினாலுமே நான் வீழ்வேனா


கட்டளைக்கு மசிய பாசத்தால் வசியமாக்க முனைந்தாலுமே 

உண்மைக்கு மட்டுமே வெற்றி சூடுமே

உண்மை காதலுடன் வருங்கால கணவனுக்காக நான்

காதல் காத்திருப்பில் மெறுகூட்டலாகும் இனிதே 

நன்றி - எம்.எஸ் சஹ்னாஸ் பேகம்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments